குழந்தை பிறந்த இரண்டு மாதம் வரை தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படுவது... தூக்கமின்மை, உடல்வலி, சோர்வு, போன்ற பிரச்சனைகளால் தான். சிலருக்கு இது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அது போன்ற சமயங்களில் குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெரியவர்கள் இளம் தாய்மார்களுடன் இருப்பது மிகவும் முக்கியம்.
பிறந்த குழந்தைகளுக்கு தாய் பால் மட்டுமே கொடுப்பது நல்லது. குழந்தைகள்... மிகவும் குறைவான பால் தான் குடிப்பார்கள், எனவே அடிக்கடி பசி எடுக்க கூடும்... ஆகையால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது குழந்தைக்கு தாய் பால் புகட்ட வேண்டும். தாய் பால்... சுரப்பு இல்லாத பட்சத்தில் உங்கள் மருத்துவரை அணுகி... ஃபார்முலா மில்க் கொடுக்கலாமா? என்பதை கேட்டு அறிந்து கொள்ளவும். ஒரு போதும் பசும் பால் 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.
குழந்தைக்கும் - தாய்க்குமான பிணைப்பு மிகவும் முக்கியம். பிறந்த குழந்தையால் உங்களிடம் பேச முடியாதே தவிர, நீங்கள் தொடும் உணர்வை உணர முடியும். நீங்கள் குழந்தையை சந்தோஷமாக தொட்டு... தழுவி, அரவணைக்கும் போது... தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும். எனவே குழந்தை பெற்ற தாய்மார்கள் முடிந்தவரை மகிழ்ச்சியாக குழந்தையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.