
தற்போது உடல் பருமனால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எப்படியாவது எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் பல வகையான டயாட்களை முயற்சியும் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி இருந்தும் சின்ன சின்ன தவறுகளை செய்வதால் அவர்களால் எடையை குறைக்க முடியாமல் போகிறது. எனவே அதை என்ன என்று அறிந்து கொண்டு தவிர்த்தால் உடல் எடையை குறைத்து விடலாம்.
மேலும் உடல் எடை அதிகரிப்பால் சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல வகையான ஆபதன நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்ற நிபுணர்கள். இதனால் தான் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் உடல் பருமனால் வரும் பக்க விளைவுகள் எல்லா வயதினரிடமும் உள்ளது. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியுடன், உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். எடை அதிகரிப்புக்கு கலோரிகள் தான் காரணம். முக்கியமாக எடை இழப்புக்கு காலை உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: ராகியை 'இப்படி' சாப்பிட்டால் விறுவிறுனு எடையை குறைக்கலாம்.. செம்ம ரெசிபி
காலை உணவு ஏன் அவசியம்?
உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவு மிகவும் அவசியம். நீங்கள் காலை உணவை ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டால் உடல் பருமனை குறைத்து விடலாம். எனவே உங்களது காலை உணவானது ஆரோக்கியமாகவும், சத்தாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அவை வளர்ச்சியை மாற்றத்தை பாதிக்கும் மற்றும் உங்களது உடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நீங்கள் எடை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், காலையில் சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க.. இந்த '10' விஷயங்களை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!
எண்ணெய் உணவுகள்:
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் உங்களது காலை உணவில் பூரி, வடை, சமோசா, பஜ்ஜி போன்ற எண்ணெய் உணவுகள் இருக்கக் கூடாது. ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகம் உள்ளதால், அவை எடையை குறைப்பதற்கு பதிலாக இன்னும் அதிகரிக்க தான் செய்யும்.
வெள்ளை பிரட்:
பலரும் வெள்ளை பிரட்டை தான் காலை உணவாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் அவற்றில் அதிகளவு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் தான் உள்ளன. இது கொழுப்பை உடலில் சேமித்து வைத்து, உடல் எடையை அதிகரிக்க வைக்கும். வேண்டுமானால் வெள்ளை பிரட்டுக்கு பதிலாக பிரவுன் பிரட் சாப்பிடுங்கள். இதில் உடலுக்கு தேவையான நார் சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் கலோரிகள் ரொம்பவே குறைவு. இதனால் எடையை அதிகரிப்பதை தடுக்கிறது. மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் அதிக பசி எடுக்காது. வயிறு நிரம்பி இருக்கும். இதன் காரணமாக எடையை செல்வமாக குறைத்து விடலாம்.
வெள்ளை அரிசி:
அரிசி தானியே வகை என்றாலும் அதில் உள்ள நார்ச்சத்துக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, வெறும் கார்போஹைட்ரேட்டுகள் மட்டும் தான் அதில் அதிகமாக இருக்கும். மேலும் இது நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்களை நமக்கு வழங்குவதில்லை. வேண்டுமானால் வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் அரிசி சாப்பிடுங்கள். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாகவே உள்ளன. அதை உடல் எடையை குறிக்க உதவும் மற்றும் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
பேக்கிங் ஜூஸ்;
நீங்கள் காலையிலேயே பேக்கிங் செய்யப்பட்ட ஜூஸ் குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்குதல் விளைவிக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் உங்களது எடையை அதிகரிக்க தான் செய்யும். ஏனெனில் இதில் அதிகளவு சர்க்கரை மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளது. உடல் பருமனால் பல நோய்கள் தான் அதிகமாக வரும். எனவே இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்ட ஜூஸ் குடியுங்கள். அது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
சாக்லேட்:
சிலருக்கு காலை எழுந்த உடனே சாக்லேட் சாப்பிடுவதை விரும்புவார்கள். ஆனால் அப்படி சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும். ஏனெனில் சாக்லேட்டில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இது உங்களது உடலை பருமனாக்கும். எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் இதை காலையில் ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.