காலையில் எழுந்ததும் இந்த '5' விஷயங்களை முதல்ல செய்ங்க! ஆரோக்கியமா இருப்பீங்க!!

First Published | Nov 29, 2024, 8:38 AM IST

Healthy Lifestyle Tips : நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்பினால் காலை எழுந்தவுடன் சில விஷயங்களை செய்ய வேண்டும். அது என்னவென்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

Healthy Lifestyle Tips In Tamil

Morning Routine For Healthy Life : இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது பெரும் சவாலான காரியமாகும். இதனால் பெரும்பாலானோர் தாங்கள் எப்போதும் ஆரோக்கியமாக மற்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்கிறார்கள். ஆனால், மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், கெட்ட பழக்கங்கள் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தில் காணப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

Healthy Lifestyle Tips In Tamil

Morning Routine For Healthy Life : இத்தகைய சூழ்நிலையில், நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவில்லை என்றால் இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான அறிகுறிகளை குறைப்பது மிகவும் கடினம். எனவே இதை சரி செய்ய சில ஆரோக்கியமான பழக்கங்களை உங்களது அன்றாட வாழ்க்கை முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அவற்றை பின்பற்றுவதன் மூலம் சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்கும்.

முக்கியமாக நீங்கள் எப்போதுமே ஆரோக்கியமாகவே இருப்பீர்கள்.  எனவே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு காலை எழுந்தவுடன் சில பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். இதனால் பல நோய்கள் விலகிவிடும். மேலும் உங்களது உடலும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். அது என்னென்ன பழக்கங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

Healthy Lifestyle Tips In Tamil

Morning Routine For Healthy Life : ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய விஷயங்கள்:

நாக்கை சுத்தம் செய்!

நீங்கள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் போது நாக்கை சுத்தம் செய்ய மறக்காதீர்கள். தொடர்ந்து நாக்கை சுத்தம் செய்து வந்தால் பாக்டீரியாக்கள் தாங்காது. இதனால் வாயில் துர்நாற்றம் அடிக்காது. மேலும் நாகை சுத்தம் செய்வதன் மூலம் சருமத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது.

இதையும் படிங்க:  நோய் வரும் முன் காக்க!! '30' வயசுக்கு மேல பெண்கள் சாப்பிடக் கூடாத '5' உணவுகள்!!

Healthy Lifestyle Tips In Tamil

Morning Routine For Healthy Life : சூரிய ஒளி:

இளம் வயதில் தோன்றும் முதுமையை தடுக்க காலை எழுந்தவுடன் சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்க வேண்டும்.  இப்படி செய்வதன் மூலம் சூரிய ஒளியானது கார்டிசோல், மெலடோனின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து, மனநிலை புத்துணர்ச்சி அடையும்.

இதையும் படிங்க:  ஒரு நாளுக்கு 'எத்தனை' முறை சாப்பிடனும்? 'எப்படி' சாப்பிடனும்? பலருக்கும் தெரியாத தகவல்!! 

Healthy Lifestyle Tips In Tamil

Morning Routine For Healthy Life : தண்ணீர் குடி

காலை எழுந்தவுடன் தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும். அதுவும் குறிப்பாக, செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இதனால் நச்சுக்கள் வெளியேறுவது மட்டுமின்றி, சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. இதற்கு நீங்கள் காலையில் எழுந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Healthy Lifestyle Tips In Tamil

Morning Routine For Healthy Life : பாதாம்:

இளமையில் ஏற்படும் வயதான அறிகுறிகளை குறைக்க காலையில் ஆரோக்கியமானதை சாப்பிட வேண்டும். இதற்கு நீங்கள் பாதாம் பருப்பு சாப்பிடலாம். இது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இது தவிர இது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் மற்றும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும். இதற்கு நீங்கள் இரவு தூங்கும் ஒரு கிளாஸ் நீரில் 5-7 பாதாம் பருப்பு ஊறவைத்து பிறகு மறுநாள் காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டும்.

Healthy Lifestyle Tips In Tamil

Morning Routine For Healthy Life : புரதம் நிறைந்த உணவுகள்:

காலையில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் வயதான அறிகுறிகளை சுலபமாக குறைத்து விடலாம். மேலும் புரதம் நிறைந்த உணவுகள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பீர்கள். இது தவிர புரோட்டின் உணவுகள் உடலை வலிமையாகவும் வைத்திருக்கும்.

குறிப்பு : ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மேலே சொன்ன இந்த விஷயங்களை பின்பற்றி வந்தால் வயதான அறிகுறிகள் குறையும், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.

Latest Videos

click me!