Human Psychology: நம்மை சுத்தி எப்போதும் நிறைய பேர் இருப்பாங்க. ஆனால் இதில் யார் நல்லவர்கள்? கெட்டவர்கள்? என்பது தெரியாது. ஆனால் சைக்காலஜி படி சில குறிப்பிட்ட சூழ்நிலைகளை வைத்து அவர்கள் எப்படிபட்டவர்கள்? என கண்டுப்பிடிக்கலாம். வாங்க பார்க்கலாம்.
நாம் வேலை நேரத்திலும் சரி, மற்ற இடங்களிலும் சரி நிறைய பேருடன் பேசுகிறோம். பழகுகிறோம். நம்மள சுத்தி எப்போதுமே ஆட்கள் இருப்பது கெத்தாக இருந்தாலும் இவர்களில் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என கண்டுபிடிப்பது கடினம். ஆனால் சில சூழ்நிலைகள் நமக்கு மனிதரின் உண்மையான முகத்தை காட்டி கொடுத்து விடும். சைக்காலஜி படி, ஒருத்தரோட முகத்தைக் காட்டிக்கொடுக்கும் 5 முக்கியமான சூழ்நிலைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
26
1. பணம் விஷயத்தில் குணம் தெரியும்
சைக்காலஜி படி, பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல ஒரு மனுஷனோட குணம் அப்பட்டமா தெரியும். சின்ன லாபத்துக்காக உறவுகளை மறக்கிறாங்களா, இல்ல நஷ்டம் வந்தாலும் நேர்மையா நிக்கிறாங்களானு பார்க்கணும். பணம் வரும்போதும் போகும்போதும் ஒருத்தர் எப்படி நடந்துக்கிறாரோ, அதை வெச்சு அவங்க உண்மையான குணத்தை எடை போடலாம்.
36
2. மன அழுத்தத்தில் இருக்கும்போது
ஒருத்தர் மன அழுத்தத்துல இருக்கும்போது அவங்களோட இயல்பான குணம் வெளியே வரும். சாதாரணமா அமைதியா இருக்கிறவங்க கூட பிரஷர்ல கோபப்படலாம், பயப்படலாம். ஆனா சிலர், அந்த நேரத்துலயும் அமைதியா பிரச்சனையைச் சமாளிப்பாங்க. இந்த வித்தியாசம்தான் அவங்க கேரக்டரைத் தெளிவா காட்டும். ஒருத்தரோட உண்மையான ரியாக்ஷனை தெரிஞ்சுக்க, அவங்க பிரஷர்ல எப்படி இருக்காங்கனு கவனிங்க.
ஒருத்தருக்கு எந்த லாபமும் இல்லைனாலும் மத்தவங்களுக்கு உதவி செய்றாங்களா இல்லையாங்கிறது அவங்களோட உண்மையான மனசைக் காட்டும். சிலர் எந்த சுயநலமும் இல்லாம உதவி செய்வாங்க. இன்னும் சிலர், லாபம் இருந்தா மட்டும்தான் உதவிக்கு வருவாங்க. சைக்காலஜி படி, உதவி செய்ற மனப்பான்மை ஒருத்தரோட நல்ல மனசைப் புரிஞ்சுக்க முக்கியமான அடையாளம்.
56
4. வெற்றி பெற்ற பிறகு
ஒருத்தர் வெற்றி அடையும்போது பணிவா இருக்காங்களா இல்ல அகங்காரத்தோட நடந்துக்கிறாங்களானு பார்க்கணும். அது அவங்க நிஜ குணத்தைக் காட்டும். அதேபோல, தோத்துட்டா பொறுப்பு ஏத்துக்கிறாங்களா இல்ல மத்தவங்கள குறை சொல்றாங்களானு பார்க்குறதும் முக்கியம். சைக்காலஜி படி, உண்மையான கேரக்டர் வெற்றியை விட தோல்வியிலதான் நல்லா தெரியும்.
66
5. விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது
ஒருத்தரை விமர்சனம் செய்யும்போது அவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்க என்பது அவங்களோட மன உறுதியைக் காட்டும். சிலர் விமர்சனத்தை பாசிட்டிவா எடுத்துக்கிட்டு தங்களைத் திருத்திக்குவாங்க. ஆனா, இன்னும் சிலர் கோபமாவோ, எரிச்சலாவோ பதில் சொல்லுவாங்க. சைக்காலஜி படி, விமர்சனத்தை ஏத்துக்கிற விதம், அந்த நபரோட முதிர்ச்சியைக் காட்டுது. இது அவங்களோட உண்மையான தன்னம்பிக்கையையும் ஈகோவையும் வெளிப்படுத்தும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.