Healthy Vegetables: சைவ உணவு பிரியர்கள் கவனத்திற்கு...இறைச்சிக்கு இணையான சத்துக்கள் கொண்ட 4 புரத உணவுகள்..

First Published Sep 11, 2022, 8:04 AM IST

Healthy Vegetables: சைவ உணவு பிரியர்கள் இறைச்சி, முட்டைக்கு இணையான புரதத் தேவைகளை பூர்த்தி செய்யும் உணவுகள் பற்றி தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

Kitchen Tips:

நம்மில் பலருக்கு இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளை சாப்பிடுவது புரதத் தேவைகளை பூர்த்தி செய்ய பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், சைவ உணவு உண்பவர்கள் புரதத்தின் தேவையை பூர்த்தி செய்ய எந்த வகையான காய்கறியாக சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

 மேலும் படிக்க...Onion Thokku: ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாத வெங்காய தொக்கு ரெசிபி..சூப்பராக எப்படி தயார் செய்வது தெரியுமா..?

Kitchen Tips:

புரதத்தைப் பெற இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்:

ப்ரோக்கோலி

நீங்கள் இறைச்சி மற்றும் முட்டை சாப்பிட விரும்பவில்லை என்றால், நீங்கள் ப்ரோக்கோலி உங்களுக்கு சிறந்த தேர்வாகும். இது ஆரோக்கியமான காய்கறி வகையை சார்ந்தது. இதில் புரதம் மட்டுமின்றி இரும்புச்சத்தும் கிடைக்கும். இதை வேகவைத்து அல்லது சாலட் செய்து சாப்பிடுவது கூடுதல் நன்மை கிடைக்கும். 

Kitchen Tips:

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதன் மூலமும் அதிகப்படியான புரதத்தைப் பெறலாம். அதற்காக நீங்கள் வித்தியாசமாக சமைக்க வேண்டும். அதாவது, நறுக்கிய உருளைக்கிழங்கை குறைந்த தீயில் வறுத்து சாப்பிட்டாலே போதும். இதிலிருந்து புரதம் மட்டுமின்றி நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும்.

 மேலும் படிக்க...Onion Thokku: ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாத வெங்காய தொக்கு ரெசிபி..சூப்பராக எப்படி தயார் செய்வது தெரியுமா..?

 கீரை:

பொதுவாக கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை பச்சை இலை காய்கறிகளில் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. இதில் புரதம் மட்டுமின்றி, வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. எனவே, தொடர்ந்து வாரம் இருமுறை  கீரையை உணவில் சேர்த்து கொண்டால் ரத்தக் கொதிப்பு, மூலம் பித்த கோளாறுகள் தீரும். 

காலிஃபிளவர்:

காலிஃபிளவரில் கரோட்டின்,  புரதம், குவர்செட்டின், சின்னமிக் அமிலம், பீட்டா கிரிப்டோசேந்தின் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. அத்துடன் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் அதிக அளவில் கிடைக்கும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் புரதத்தின் தேவை பூர்த்தியாகும்.

 மேலும் படிக்க...Onion Thokku: ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாத வெங்காய தொக்கு ரெசிபி..சூப்பராக எப்படி தயார் செய்வது தெரியுமா..?

click me!