Brain:
இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் நடவடிக்கை என எல்லாவற்றையும் மூளை முறைப்படுத்துகிறது. 100 சதவிகித மூளை அளவில், மனிதர்கள் 2 சதவீதம் முதல் 5 சதவீத மூளையையும், ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.
Brain:
மூளையைப்பற்றிய சில அதிசய உண்மைகளை பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்...
1. நமது உடலில் மூளையானது, கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. அதற்கென ஏகப்பட்ட புரோகிராம்கள் எழுதப்பட்டு விடுகின்றன.
2. எந்த ஒரு விஷயத்தையும் சரியாக பார்க்க மூளை உதவுகிறது. கண் எனும் கேமரா மூலம் தலை கீழாக விழும் பிம்பங்களை நேராக்கி காட்டும்.
3. எந்த உபகரணமும் இல்லாமல் பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள நட்சத்திரங்கள் வரை பார்க்க வைக்கும்.
Brain:
4. சமையலறையிலிருந்து வரும் வாசனையை மூக்கு நுகர்வதற்குள், மூளையின் செயல்பாட்டின் மூலம் என்ன குழம்பு எனச் சொல்லிவிடும்.
5. நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது.
6. காதில் விழும் செருப்பு சத்தத்தை வைத்து வீட்டிற்கு வருவது அப்பாவா…மனைவியா கண்டுபுடிச்சிரும்.
Brain:
7. மூளை போகும் வழி என்ன..? என்பதை ஞாபகம் வைக்கும். வீட்டைக் கடப்பது ஆட்டோவா…பைக்கா, என்பதை சத்தத்தை வைத்தே கண்டறியும்.
8. ஒரு மின்விளக்கை எரிய வைக்கும் 25 வாட்ஸ் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும்.
9. நமது மூளை நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும். எனவே, மூளைக்கும் எப்போதும் ஓய்வே கிடையாது.