
வண்ண வண்ணப் பட்டில், வசீகரிக்கும் டிசைனில், கண்ணைப் பறிக்கும் அழகில் உங்கள் செல்ல மகள்களைத் தேவதைகளாக ஜொலிக்க வைக்கும் அசத்தலான பட்டுப் பாவாடை டாப்ஸ் கலெக்ஷன்ஸ் இதோ.
பாரம்பரியத்தில் புதுமை, ஒவ்வொரு டிசைனிலும் தனி அழகு, ஒவ்வொரு குட்டி தேவதைக்கும் இளவரசி தோற்றம் என இந்தத் தீபாவளியில் உங்கள் செல்லங்களின் சிரிப்போடு, அவர்களின் பட்டுப் பாவாடையும் திருநாளின் ஸ்பெஷல் அட்ராக்ஷனாக மாறட்டும்.
பட்டாம்பூச்சி சிறகுகளை நினைவூட்டும் அழகிய கழுத்து டிசைன், கம்பீரமான ஜரி வேலைப்பாடுகளுடன் கூடிய பஃப் ஸ்லீவ்ஸ், கண்ணைக் கவரும் முன்பக்க அலங்காரங்கள், குடைபோல் விரியும் பட்டுப்பாவாடை மடிப்புகள் என ஒவ்வொரு டிசைனும் அசத்தல். பாரம்பரிய அழகும் மாடர்ன் ஸ்டைலும் இணைந்த இந்த ஆடை, குட்டி தேவதைகளை இன்னும் அழகாக ஜொலிக்க வைக்கும்.
இந்த ஆடையில் பாரம்பரிய பட்டுப்பாவாடையின் அழகை மெருகேற்றும் வகையில், எளிமையான ரவிக்கை டிசைன், அழகிய பார்டர் வேலைப்பாடுகள் மற்றும் குடைபோல் விரியும் பாவாடை மடிப்புகள் அமைந்துள்ளன.
ரவிக்கையின் கழுத்துப் பகுதி வட்ட வடிவில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்லீவ்ஸ் இல்லாத மாடர்ன் டிசைன், இடுப்புப் பகுதியில் அழகாகப் பொருந்தும் அமைப்பு என ரவிக்கை தனித்துவமாகக் காட்சியளிக்கிறது.
கிராஸ் வடிவ சிறிய எம்பிராய்டரி வேலைப்பாடுகளும், முன்புறம் கட்டிக்கொள்ளும் கயிறு டிசைன், பாரம்பரிய பட்டுப்பாவாடை ஸ்டைலுடன் இணைந்து குட்டிப் பெண்களை குட்டி இளவரசிகளாக ஜொலிக்க வைக்கும். பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டுப்புடவை டிசைனை நினைவூட்டும் இந்தப் பாவாடை செட், குட்டிப் பெண்களுக்கு அழகான எத்னிக் மற்றும் மாடர்ன் லுக்கை வழங்கும்.
கை இல்லாத ஸ்லீவ்லெஸ் ரவிக்கை டிசைன், தோள்பகுதியை அழகாகக் காட்டும் நேர்த்தியான கட், கழுத்தைச் சுற்றி மணிகள் பதித்த அலங்காரம் என இந்த ரவிக்கை தனித்துவமாகக் காட்சியளிக்கிறது. முன்புறத்தில் பூக்கள் மற்றும் இலைகள் கொண்ட எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.
ரவிக்கையின் கீழ் ஓரத்தில் வளைவுகளுடன் அமைந்த அலங்கார பார்டர், அதற்கு டிசைனர் தோற்றத்தை வழங்குகிறது. இதனுடன் இணைந்துள்ள பாரம்பரிய ஜரி வேலைப்பாடுகள் நிறைந்த, குடைபோல் விரியும் பாவாடை மடிப்புகள் குட்டிப் பெண்களுக்கு அழகான மாடர்ன் மற்றும் டிரெடிஷனல் லுக்கைத் தருகின்றன.
அழகிய ஸ்கொயர் நெக் அமைப்புடன், தங்க நிற ஜரிகை பார்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கழுத்துப் பகுதியில் கயிறு கட்டும் வசதியுடன் கூடிய ஹால்டர் ஸ்டைல் டிசைன், பாரம்பரியத்தையும் மாடர்ன் லுக்கையும் இணைக்கிறது.
தோள்பட்டை கயிறுகள் மற்றும் ஜரிகை பார்டர் சிறப்பம்சமாக உள்ளன. ஸ்லீவ்லெஸ் மாடலில் அழகிய தோள்பட்டை அமைப்பு, கோல்டன் எம்பிராய்டரி அலங்காரத்துடன் பாரம்பரியமும் மாடர்ன் லுக்குமாக உங்கள் குட்டி தேவதைக்கு ஏற்ற ராயல் பட்டுப் பாவாடை டிசைன்.
இந்த ஆடையில் ஸ்லீவ்லெஸ் ரவிக்கை டிசைன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்துப் பகுதியில் வட்ட வடிவ நெக் டிசைன் கொடுக்கப்பட்டு, அதன் ஓரங்களில் சிறிய மணிகள் மற்றும் அலங்கார வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தோள்பட்டையின் இருபுறங்களிலும் பூ வடிவில் துணியைச் சுருக்கி உருவாக்கப்பட்ட 3D ஃபிரில் டிசைன் ஆடைக்கு தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது.
பாவாடையில் அடர்த்தியான ப்ளீட்ஸ் மடிப்புகள் கொடுக்கப்பட்டு, கீழ்ப்பகுதியில் அகலமான ஜரி பார்டர் அமைந்துள்ளது. இடுப்பில் கயிறு கட்டும் டிசைனும் இருப்பதால், ஆடையைப் பொருத்தமாக அணிய முடியும். பாரம்பரிய பட்டுப்பாவாடையுடன் அழகான பூ வடிவ ஃபிரில் டிசைன் இணைந்திருப்பது, குட்டிப் பெண்களுக்கு நவீனமும் பாரம்பரியமும் கலந்த க்யூட் லுக்கை வழங்குகிறது.
இந்த ஆடையில் காலர் வைத்த கோட் ஸ்டைல் ஸ்லீவ்லெஸ் ரவிக்கை டிசைன் தனித்துவமாக அமைந்துள்ளது. கழுத்துப் பகுதியில் அகலமான V வடிவில் விரியும் காலர், அதன் இருபுறங்களிலும் அழகாகப் பதிக்கப்பட்ட கற்கள் மற்றும் மணிகள் கொண்ட எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றன.
தோள்பகுதியில் சிறிய காலர் போன்ற அமைப்பும், முன்புறத்தில் கோட் அணிந்தது போன்ற வடிவமைப்பும் இந்த ரவிக்கைக்கு மாடர்ன் லுக்கை வழங்குகின்றன. இடுப்புப் பகுதியில் பொருத்தமாக அமையும் ரவிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள பாவாடையில் அடர்த்தியான மடிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய பட்டுப்பாவாடையுடன் கோட் ஸ்டைல் ரவிக்கை இணைந்திருப்பதால், குட்டிப் பெண்களுக்கு விசேஷ நாட்களில் அணிய ஏற்ற டிசைனர் தோற்றத்தை இந்த ஆடை வழங்குகிறது.