பீரோவில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பழைய பட்டுப் புடவைகள் இருக்கிறதா? திருமணம், விசேஷ நாட்களுக்காக வாங்கிய பட்டுப் புடவைகள் இப்போது அணியாமல் அப்படியே இருக்கின்றனவா? அப்படியானால், உங்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு காத்திருக்கிறது.
பழைய பட்டுப் புடவையைக் கொடுத்துவிட்டு, அதன் மதிப்புக்கு ஏற்ப புதிய ஆடைகளை வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கோ-ஆப்டெக்ஸ்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புத் திட்டம், பழைய பட்டுப் புடவைகளைப் பயனுள்ளதாக மாற்ற விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், புதிய பட்டுப் புடவைகள் வாங்கும்போது தள்ளுபடி சலுகையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பழைய புடவை இனி வீணாகக் கிடக்க வேண்டாம். அதன் மதிப்பைப் பயன்படுத்திப் புதிய ஆடைகளை வாங்கலாம்.
இந்தத் திட்டம் எங்கு செயல்படுகிறது? எந்த வகையான புடவைகளைக் கொடுக்கலாம்? அதன் மதிப்பு எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்