கருப்பு தேநீர், ஜோஜோபா எண்ணெய்
கருப்பு தேநீரில் டானின்கள் அதிகம் உள்ளன. இவை இயற்கையாகவே முடியை கருமையாக்கவும், நல்ல நிறத்தை அளிக்கவும் உதவுகின்றன. ஜோஜோபா எண்ணெய், உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய்களை ஒத்திருக்கிறது. இது முடியை ஹைட்ரேட் செய்யவும், சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
இந்தக் கலவை நரைத்த முடியின் தோற்றத்தை மேம்படுத்துகிறது, ஊட்டத்தை அளிக்கிறது. மேலும், வறட்சியைக் குறைக்கிறது. இந்த எண்ணெய் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. முடி உதிர்தலையும் குறைக்கிறது.