Saree Maintaining Tips: புடவை ஆயுசுக்கும் புதுசா இருக்கும்... பெண்களுக்கே தெரியாத 10 புடவை ரகசியங்கள்!

Published : Nov 18, 2026, 03:36 PM IST

Saree Maintaining Tips: எத்தனை வருஷம் பழைய புடவையாக இருந்தாலும் சரி, இந்த 10 டிப்ஸ் உங்க புடவையை எப்போதும் புதிது போல பாதுகாக்க உதவும். கட்டாயம் நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய அந்த ஈஸியான 10 டிப்ஸ்!

PREV
110
பட்டுப்புடவையைத் தண்ணீரில் நனைக்கக் கூடாது

பட்டுப் புடவைகளைத் தண்ணீரில் போட்டு அலசுவதோ அல்லது ஊறவைப்பதோ கூடாது. தண்ணீரில் உள்ள உப்புகள் மற்றும் ஆக்சிஜன் காரணமாக பட்டு நூல்களும் ஜரிகையும் பலவீனமாகி, கறுத்துப் போய்விடும். பட்டுப் புடவைகளுக்கு டிரை கிளீனிங் மட்டுமே சிறந்தது.

210
அவசரத் தேவைக்கான 'ஸ்பாட் கிளீனிங்'

புடவையில் எங்கேனும் உணவு அல்லது குழம்பு சிந்திவிட்டால், முழுப் புடவையையும் நனைக்காமல், அந்த அழுக்குப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பஞ்சால் லேசாகத் தொடைத்து எடுத்துவிட்டு உடனடியாகக் காயவைக்க வேண்டும்.

310
வேர்வை நாற்றத்தைப் போக்க பெர்ஃபியூம் தெளிக்கக் கூடாது

விசேஷங்களுக்குச் சென்றுவிட்டு வந்ததும் புடவையில் வேர்வை நாற்றம் இருந்தால், உடனே துவைக்காமல், நிழலான காற்றோட்டமான இடத்தில் 4 முதல் 5 மணி நேரம் விரித்துக் காயவைத்தால் நாற்றம் போய்விடும். பெர்ஃபியூமில் உள்ள ஆல்கஹால் புடவையின் சாயத்தை மங்கச் செய்துவிடும் மற்றும் ஜரிகையைக் கறுக்கச் செய்துவிடும். எனவே பெர்ஃபியூமை உடம்பில் அல்லது இன்னர்ஸில் மட்டுமே தெளிக்க வேண்டும்.

410
காட்டன் புடவைகளுக்கு 'உப்பு தண்ணி ரகசியம்'

புதிய காட்டன் புடவையை முதல் முறை துவைக்கும்போது சோப்புப் போடாமல், கல் உப்பு கலந்த தண்ணீரில் சரியாக 15 நிமிடங்கள் மட்டும் ஊறவைக்க வேண்டும். இது சாயத்தை நிலைநிறுத்த உதவும், இதனால் சாயம் போகாது.

510
காட்டன் புடவைகளை நிழலில் காயவைப்பது

காட்டன் புடவைகளைத் துவைத்த பிறகு தலைகீழாகத் திருப்பி, நேரடி வெயிலில் போடாமல் நிழலான காற்றோட்டமான இடத்தில்தான் காயவைக்க வேண்டும். வெயில் பட்டு நூல்கள் நாராக மாறுவதைத் தவிர்க்கலாம்.

610
மெல்லிய கஞ்சி போடுதல் மற்றும் எண்ணெய் பயன்பாடு

கஞ்சி மிகவும் திக்காக இருக்கக்கூடாது; தண்ணீர் போல் மெலிதாக இருக்க வேண்டும். புடவையைப் பிழியாமல், கஞ்சித் தண்ணீரில் லேசாக முக்கி எடுக்க வேண்டும். கஞ்சியுடன் அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் புடவை விரைத்துப்போகாமல் சாஃப்ட்டாக இருக்கும்.

710
ஃபேன்சி புடவைகளுக்கு 'ஷாம்பூ வாஷ்'

ஜார்ஜெட், ஷிபான், பிராசோ போன்ற ஃபேன்சி புடவைகளைச் சோப்புப் பவுடர் போட்டுத் துவைக்காமல், தலைக்குப் பயன்படுத்தும் ஷாம்பூ கலந்த குளிர்ந்த நீரில் 5 நிமிடங்கள் மட்டும் ஊறவைத்து மென்மையாக அலச வேண்டும். மெஷினில் துவைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

810
பிளாஸ்டிக் கவருக்குப் பதிலாக காட்டன் துணி

பட்டுப்புடவைகளை பிளாஸ்டிக் கவர் அல்லது ஜிப் பைகளில் அடைத்து வைத்தால் ஈரம் தங்கி பூஞ்சை பிடிக்கும் மற்றும் ஜரிகை கறுத்துவிடும். எனவே, சுத்தமான வெள்ளை காட்டன் வேஷ்டி, பருத்தித் துணி அல்லது காட்டன் சாரி கவர்களில் சுற்றி வைக்க வேண்டும். மேலும் இதை நன்றாக காய வைத்து எடுத்து வைக்க வேண்டும்.

910
மூன்று மாதத்திற்கு ஒருமுறை 'மடிப்பு மாற்றுதல்'

ஒரே மடிப்பில் பல மாதங்கள் புடவை இருந்தால் அந்த இடத்தில் ஜரிகை உடைந்துவிடும். எனவே, ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறையும் புடவையை வெளியே எடுத்து, நிழலில் காற்றுலங்கச் செய்து, வேறொரு புதிய கோணத்தில் மடித்து வைக்க வேண்டும்.

1010
ஹேங்கரில் தொங்கவிடும்போது கவனிக்க வேண்டியவை

பாரமான பட்டுப்புடவைகளை மெட்டல் ஹேங்கர்களில் தொங்கவிட்டால் துருப்பிடித்து கறை படியும் மற்றும் புடவையின் ஷேப் மாறிவிடும். மரத்திலான ஹேங்கர்கள் அல்லது பேடட் ஹேங்கர்களைப் பயன்படுத்துவது நல்லது. இந்த முறைகளைப் பின்பற்றி வந்தால் உங்கள் புடவைகள் எப்போதும் புதிது போலவே இருக்கும்!

Read more Photos on
click me!

Recommended Stories