KKR vs DC: உன்னை பென்ச்சுல உட்கார வச்சாதான் புத்தி வரும்..! டெல்லி அணி அதிரடி.. கேகேஆர் அணியில் 2 மாற்றங்கள்

First Published Oct 24, 2020, 3:30 PM IST

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 13வது சீசனில் இன்று 2 போட்டிகள். பிற்பகல் 3.30 மணி போட்டியில் கேகேஆரும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பவுலிங்கை தேர்வு செய்தார்.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அனுபவ வீரர் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா அணியில் சேர்க்கப்பட்டதால், அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய டேனியல் சாம்ஸ் நீக்கப்பட்டார்.
undefined
பிரித்வி ஷா, இந்த சீசனின் தொடக்கத்தில்(முதல் ஆறு போட்டிகள்) அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து, சில சிறந்த இன்னிங்ஸ்களை ஆடினார். ஆனால் கடைசி 4 இன்னிங்ஸ்களில் 2 டக் அவுட்டுகளுடன், மொத்தமாகவே 11 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். தவான் நல்ல ஃபார்மில் தொடக்கம் முதலே அடித்து ஆடுவதால், மற்றொரு வீரரும் அடித்து ஆட வேண்டிய அவசியமில்லை. அதனால் தவானுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி, பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடும் வீரராக ஒருவர் வேண்டும் என்றவகையில், அனுபவ வீரர் ரஹானே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி:ஷிகர் தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, துஷார் தேஷ்பாண்டே.
undefined
கேகேஆர் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டாம் பாண்ட்டனுக்கு பதிலாக சுனில் நரைனும், குல்தீப் யாதவுக்கு பதிலாக கமலேஷ் நாகர்கோட்டியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
undefined
கேகேஆர் அணி:ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், லாக்கி ஃபெர்குசன், கமலேஷ் நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
undefined
click me!