#CSKvsKXIP வாழ்வா சாவா போட்டியில் அதிரடி மாற்றங்களை செய்த பஞ்சாப்..! மயன்க் அகர்வால் கம்பேக்

First Published Nov 1, 2020, 3:46 PM IST

சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், பஞ்சாப் அணி பிளே வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இன்று சிஎஸ்கேவை எதிர்கொண்டு ஆடிவருகிறது. 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, இந்த போட்டியில் வென்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.
undefined
எனவே கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கேவை எதிர்கொண்டு ஆடுகிறது. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத போதிலும், வாழ்வா சாவா போட்டி என்பதால், நல்ல ஃபார்மில் இருக்கும் தரமான வீரரான மயன்க் அகர்வாலின் பங்களிப்பு அவசியம் என்பதால், முழுமையாக உடற்தகுதி பெறாதபோதிலும் மயன்க் அகர்வால் இந்த போட்டியில் ஆடுகிறார். அவர் அணியில் சேர்க்கப்பட்டதால் பவுலர் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டுள்ளார்.
undefined
பஞ்சாப் அணியால் மிகுந்த நம்பிக்கையுடன் பத்தே முக்கால் கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல், முதல் போட்டியிலிருந்தே சொதப்பினார். 13 போட்டிகளில் ஒரு போட்டியில் அவர் சரியாக ஆடவில்லை. அவர் ஏன் ஆடும் லெவனில் என்ற கேள்வி, ஒவ்வொரு போட்டியிலுமே எழுந்த நிலையில், இன்றைய போட்டியில் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மந்தீப் சிங், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், ஜிம்மி நீஷம், கிறிஸ் ஜோர்டான், தீபக் ஹூடா, முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோய், ஷமி.
undefined
சிஎஸ்கே அணியில் ஷேன் வாட்சனுக்கு பதிலாக, காயத்திலிருந்து மீண்ட டுப்ளெசிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கரன் ஷர்மாவிற்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
சிஎஸ்கே அணி:டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜெகதீஷன், ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இங்கிடி, இம்ரான் தாஹிர்.
undefined
click me!