Mobile Charging Wire: மக்களே உஷார்! தூங்கும் போது செல்போன் சார்ஜ் வயரை தொட்ட இளைஞர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி

First Published | Oct 27, 2024, 10:57 AM IST

Mobile Charging Wire: இளைஞர் ஒருவர் செல்போன் சார்ஜ் செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சார்ஜ் போட்ட செல்போனை தொட்டதால் ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரத்தில் செல்போன்களை பயன்படுத்திவிட்டு உறங்கும் போது படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவதையும், அதேபோல் சார்ஜ் போட்டுவிட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், செல்போன் வெடித்தும்,  மின்சாரம் தாக்கியும் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன. 

அதேபோல் ஜார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசும் போது வெடித்து விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் செல்போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: Transport Department: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு பேருந்துல போறீங்களா? அப்படினா இதோ முக்கிய செய்தி!

Tap to resize

தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் மாலோத் அனில் (23). இவர் நேற்று தனது செல்போனில் சார்ஜ் போட்டுவிட்டு, ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் அந்த ஒயரை அப்படியே தொங்கவிட்டு தூங்கியுள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கை சார்ஜரில் பட்டுள்ளது. அப்போது சார்ஜர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததை அடுத்து அலறியுள்ளார்.

இதையும் படிங்க:  November Month School Holiday: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? வெளியான தகவல்!

இதனையடுத்து படுகாயமடைந்த மகனை பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: School Holiday: ஹேப்பி நியூஸ்! நவம்பர் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

Latest Videos

click me!