Car Accident: நொடியில் நடந்த கோர விபத்து! அலறியபடி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி! நடந்தது என்ன?

Published : Oct 26, 2024, 07:57 PM IST

Car Accident: கார் டயர் வெடித்து லாரி மீது மோதியதில், இஸ்கான் கோயில் பிரதிநிதிகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

PREV
14
Car Accident: நொடியில் நடந்த கோர விபத்து! அலறியபடி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி! நடந்தது என்ன?

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர் உட்பட 6 பேருடன் கார் ஒன்று வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது சிங்கள மலை என்ற பகுதியில் கார் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் கார் டயர் வெடித்தது. 

24

இதனையடுத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அந்த கார் பயங்கரமாக மோதியது.

34

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீண்ட நேரம் போராடி லாரியின் அடியில் சிக்கி இருந்த காரை மீட்டனர். 

44

பின்னர் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விபத்தில் உயிரிழந்தவர்கள் அனந்தபூரில் உள்ள இஸ்கான் கோயில் பிரதிநிதிகள் என தகவல் வெளியாகியுள்ளது. கார் விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

click me!

Recommended Stories