ரயிலில் நெய் எடுத்துச் செல்லலாமா? விதிமுறைகள் சொல்வது என்ன?

First Published | Oct 26, 2024, 9:24 AM IST

ரயில்வே சட்டப்படி, எளிதாக தீ பிடிக்கும் பொருட்களை  ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாது. குறிப்பாக கியாஸ் சிலிண்டர், பட்டாசு போன்ற பல பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், ரயிலில் நெய் கொண்டு செல்லலாமா?

ரயிலில் தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்பவர்கள் மீது ரயில்வே சட்டம் 1989-இன் பிரிவு 67, 164, 165 பிரிவுகளின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1,000 அபராதமும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். எடுத்துச் செல்லும் பொருளின் அளவு மற்றும் தன்மையைப் பொறுத்து, தண்டனை அதிகரிக்கலாம்.

பயணிகள் ரயிலில் ஒரு முழு பெட்டியை வாடகைக்கு எடுக்கும்போதும், சுற்றுலாவுக்கு ரயில் பெட்டிகளை வாடகைக்கு எடுக்கும்போதும் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்துச் செல்ல மாட்டோம் என்று எழுத்துபூர்வ உறுதிமொழி பெறப்படும். ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்மிக யாத்திரை ரயில்களில் பயணிகள் கொண்டுவரும் பொருள்கள் ரயில்வே பாதுகாப்பு குழுவால் சோதனை செய்யப்படும்.

Tap to resize

பொதுவாக கியாஸ் சிலிண்டர், பட்டாசு, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், வெல்டிங்க் கருவிகள், உலர்ந்த புல் மற்றும் சருகுகள், கழிவு காகிதம், இறந்த கோழி, அமிலப் பொருட்கள் போன்றவற்றை ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாது. மீறி எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய சட்டம் ஆகும்.

சில பொருள்களை குறிப்பிட்ட அளவில் மட்டும் எடுத்துச் செல்ல ரயில்வே அனுமதிக்கிறது. அந்த வகையில் பயணிகள் ரயிலில் நெய்யை எடுத்துச் செல்லலாம். ஆனால், 20 கிலோ வரை மட்டுமே கொண்டு செல்ல முடியும். ​​அதுவும் கசிவு ஏற்படாத வகையில் இறுக்கமாக மூடப்பட்ட டின்னில் பாதுகாப்பாக பேக் செய்திருக்க வேண்டும்.

Trains Cancelled

நெய்யை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடுத்துச் சென்றாலும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். எனவே, ரயிலில் பயணிப்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்லாமல் ஒத்துழைப்பு தரவேண்டும். ரயில்வே துறையின் விதிகளுக்குக் கட்டுப்பட்ட தீப்பிடிக்கும் பொருள்கள் ரயில் பயணத்தின்போது எடுத்துச் செல்லக்கூடாது.

Latest Videos

click me!