ஃபீவர்னு ஹாஸ்பிடலுக்கு போனது குத்தமா! மயக்க ஊசி போட்ட லேப் டெக்னீசியன்! கதறிய இளம்பெண்! நடந்தது என்ன?

Published : Sep 12, 2025, 02:39 PM IST

Hospital Lab Technician: கரீம்நகர் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 20 வயது இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு மருத்துவமனை ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

PREV
14
இளம்பெண்

தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த 6ம் தேதி கரீம்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு நேற்று அம்மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் வந்தார். அப்போது பெண்ணுக்கு ஊசி போட வேண்டும். அனைவரும் வெளியே காத்திருங்கள் எனக்கூறியுள்ளார். அதன்படி பெண்ணின் பெற்றோர் அறைக்கு வெளியே சென்று காத்திருந்தனர்.

24
மயக்க ஊசி போட்டு பலாத்காரம்

அப்போது அந்த நபர் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை துணியால் மறைத்து இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கிய அப்பெண்ணை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அறையில் இருந்து அவர் வெளியே சென்றவுடன் இளம்பெண்ணின் பெற்றோர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மகள் மயங்கிய நிலையில் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்துள்ளது.

34
பெற்றோர் அதிர்ச்சி

44
போக்சோ சட்டத்தில் கைது

இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை சோதனை செய்தபோது அதில் ஆபாச படங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories