சி.பி.ராதாகிருஷ்ணணுக்கு பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதேபோல் கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகரும் சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் ஜி அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அர்ப்பணிப்புள்ள பொது சேவகர், தேசபக்தி கொண்ட தலைவர், மற்றும் நேர்மையின் குரல், அவரது பல தசாப்தகால சேவை மற்றும் மக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பு நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை எடுத்துக்காட்டுகிறது. அவரது இந்த பயணம் தொடர்ந்து பல லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்து, இந்தியாவின் முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தட்டும்'' என்று கூறியுள்ளார்.