பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குணமடைந்த அப்பபெண் சபர்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோருடன் வசித்து வரும் அப்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவத்தின் போது பணியில் இருந்த ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.