ஜி20 இரவு விருந்து: உலகத் தலைவரகளுடன் பிரதமர் மோடி!

First Published | Sep 10, 2023, 12:44 PM IST

ஜி20 இரவு விருந்தில் உலகத் தலைவர்களுடன் கலந்து கொண்ட புகைப்படங்களை பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, ஜோ பைடன். IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியர்ஜிய்வா ஆகியோருடன் பிரதமர் மோடி

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு விருந்தில் கலந்து கொண்டார்.

Tap to resize

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

ஜி20 இரவு விருந்தில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் உடனிருந்தார்

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். பாஜகவுக்கு எதிராக ஓரணியில் எதிர்க்கட்சிகள் திரண்டுள்ள நிலையில், அதில் முக்கியப் பங்காற்றுபவர் நிதிஷ் குமார்

ஜி20 இரவு விருந்தில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். சனாதன சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, ஸ்டாலின் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது கவனம் ஈர்த்துள்ளது

Latest Videos

click me!