திருப்பதி மலை பாதையில் சிறுமியை கொன்று பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை.! இன்று கூண்டில் சிக்கிய 4வது சிறுத்தை

Published : Aug 28, 2023, 09:27 AM IST

திருப்பதி மலை பகுதியில் சிறுமியை தாக்கி சிறுத்தை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வனத்துறை வைத்த கூண்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
திருப்பதி மலை பாதையில் சிறுமியை கொன்று பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை.! இன்று கூண்டில் சிக்கிய 4வது சிறுத்தை
tirupati leopard attack

திருப்பதி- சிறுமியை கொன்ற சிறுத்தை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களிலும் இருந்து வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த ஜூன் 24-ம் தேதி, கர்னூலை சேர்ந்த 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி பிடித்துச் சென்றது. இதனைப் பார்த்த பெற்றோர், பக்தர்கள் துரத்தியதால், அச்சிறுவனை விட்டு விட்டு, சிறுத்தை தப்பி ஓடி விட்டது.

இதனையடுத்து அடுத்த ஒரு வாரத்தில் கடந்த 11ஆம் தேதி பெற்றோர்களுக்கு சற்று முன்பாக அலிபிரி நடைபாதையில் நடந்து சென்ற நெல்லூரை சேர்ந்தலக்‌ஷிதா (6) எனும் சிறுமியை சிறுத்தை இழுத்து சென்று அடித்துக்கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களை அச்சத்தில் உலுக்கியது.இதன் காரணமாக நடைபாதை பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

24
Leopard

 கூண்டில் சிக்கிய சிறுத்தைகள்

சிறுத்தையின் மீதான அச்சம் காரணமாக பக்தர்கள் திருப்பதி வருகை தருவது சற்று குறைந்திருந்தது. இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. சிறுத்தையால் கொல்லப்பட்ட சிறுமி பிணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைத்தனர். அப்போது சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் இரண்டு வயது கொண்ட  சிறுத்தை ஒன்று பிடிபட்ட நிலையில் அதனை பாக்கராபேட்டை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இருப்பினும் இதன் தாய் சிறுத்தை அதே பகுதியில் சுற்றி வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர். 

34

பக்தர்களுக்கு கட்டுப்பாடு

மேலும் திருப்பதி மலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூண்டுகளை அமைக்கவும் செய்தனர். இதனையடுத்து அந்த கூண்டில் கடந்த 14ஆம் தேதி மற்றொரு பெண் சிறுத்தை சிக்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி 3வது சிறுத்தை பிடிபட்டது. கடந்த 20 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து  3 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது பக்தர்களை அதிர்ச்சி அடையவைத்தது. மேலும் கூண்டில் சிக்கிய சிறுத்தைகள் கடும் ஆக்ரோஷமாக காணப்பட்டது. 

44

சிக்கியது 4வது சிறுத்தை

இந்தநிலையில் மீண்டும் இன்று காலை வனத்துறை வைத்துள்ள கூண்டில் 4 வதாக ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. சிறுத்தையை உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கப்படுமா அல்லது  அடர்ந்த வன பகுதிகளில் விடப்படுமா என இன்னும் முடிவு செய்யப்படவில்லையென கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

திருப்பதி நடைபாதையில் ஆறு வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது; அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சி

click me!

Recommended Stories