விண்வெளியில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மறக்க முடியாத சாதனைகளும், சந்திரயான் - 3 பயணமும்!!

First Published | Aug 23, 2023, 11:58 AM IST

இந்தியாவின் கடந்த 9 ஆண்டுகால விண்வெளி சாதனைகளுக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும் சந்திரயான் 3-ன் வெற்றிப் பயணம் இந்தியாவின் விண்வெளி அதிசயங்களை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது என்று மத்திய அரசு டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்த நிலையில்தான் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் இன்று சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குகிறது. இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த தருணத்தைக் காண இந்தியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இஸ்ரோவின் சாதனை

கடந்த 9 ஆண்டுகளில் 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் 389-ஐ இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. விண்வெளி கண்டுபிடிப்புகளில் நமது திறமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. 

விண்வெளி பட்ஜெட் அதிகரிப்பு

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி பட்ஜெட்டுக்கான செலவு ரூ. 5615 கோடியில் இருந்து ரூ. 12543 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

சாட்டிலைட் வருமானம்

கடந்த ஒன்பது ஆண்டுகளில் வெளிநாட்டைச் சேர்ந்த 389 சாட்டிலைட்டுகளை ஏவியதன் மூலம் நாட்டுக்கு ரூ. 3,300 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது நாடுகளுக்கு இடையிலான விண்வெளி ஒப்பந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

இஸ்ரோ சாட்டிலைட் எண்ணிக்கை

2014ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 1.2 என்ற விகிதத்தில் சாட்டிலைட்டுகள் ஏவப்பட்டு வந்தன. 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த விகிதம் 5.7 ஆக அதிகரித்துள்ளது. 

இஸ்ரோ சாட்டிலைட்

இஸ்ரோவின் ஏவுகணை எண்ணிக்கை 2014-க்கு முன்பு 4-ல் இருந்து 2014-லிருந்து 11-ஆக உயர்ந்துள்ளது. இது இளைஞர்கள் இடையே விண்வெளி ஆய்வுக்கான உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான் ஆர்பிட்டர்

ஆராய்ச்சியாளர்களுக்கு சந்திரயான் ஆர்பிட்டர் சிறந்த அறிவியல் புள்ளி விவரங்களை அளிக்கிறது. இதனால் இன்று நிலவில் காலடி வைக்கும் சந்திரயான் 3-ஐ உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

யுவிகா திட்டம்

எதிர்கால விஞ்ஞானிகளை வடிவமைக்கும் வருடாந்திர சிறப்பு திட்டமாக யுவிகா கொண்டு வரப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், ஜம்மு மற்றும் அகர்தலா கல்வி நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்புகளுடன் 3 ஆண்டுகளில் 603 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தனியார் ஏவுகணை தளம்

நவம்பர் 25, 2022 அன்று, முதல் தனியார் ஏவுதளம் மற்றும் பணிக் கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டதுடன் வரலாறு படைக்கப்பட்டது. விண்வெளி ஆய்வின் புதிய சகாப்தத்திற்கு முன்னோடியாக இது அமைந்தது.

SSLV - D2 செயற்கைக்கோள்

ஸ்பேஸ் கிட்ஸ் என்ற திட்டத்தின் மூலம் 750 மாணவிகளின் கூட்டு முயற்சியால், வரலாற்று சிறப்புமிக்க SSLV - D2 மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வழிவகுத்தது.

நாசாவுடன் இந்தியா கூட்டு

நாசாவுடன் இணைந்து அடுத்த கட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. சந்திரயான் 3 வெற்றி இந்த ஒப்பந்தத்திற்கு மேலும் வலு சேர்க்கும். அடுத்தகட்டமாக நிலவில் மனிதர்கள் இறங்குவதற்கான ஆர்டிமிஸ் திட்டத்திற்கு சந்திரயான் 3 வெற்றி உதவும். நிசார் சாட்டிலைட்டுக்கு ரூ. 470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோவும், நாசாவும் பல்வேறு திட்டங்களில் கைகோர்த்துள்ளன.

140 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்

140 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 2020 முதல் இந்தியாவின் விண்வெளிக்கு உதவி வருகின்றன. IN-SPACe ஆனது, தொழில்துறை, கல்வித்துறை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி, விண்வெளி ஆய்வை மீண்டும் எழுதுகிறது.

Latest Videos

click me!