வந்தே பாரத் ரயில் ஒரு அதிவேக ரயில் ஆகும். இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படுகிறது. பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்று வருகிறது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய செய்தி ஒன்றை அறிவித்துள்ளார்.
சரஸ்வதி வித்யா மந்திர் மாணவர்கள் 50 பேர் போட்டியின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். கட்டாக்கில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி கட்டும் முன் பூமி பூஜையின் போது அமைச்சர் இதனை அறிவித்தார். அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறும்போது, ‘வந்தே பாரத் ரயிலை மாணவர்கள் பார்த்ததும் அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்குள் எழுந்தது.
இதில் 50 மாணவர்கள் போட்டி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும். இந்த ஆண்டு மே 18ஆம் தேதி காணொளிக் காட்சி மூலம் பூரி - ஹவுரா இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், புகழ்பெற்ற புவனேஸ்வர் ராஜ்தானி ரயிலுக்கு நாளை முதல் புதிய ‘தேஜாஸ்’ ரேக் கிடைக்கும் என்பது பெருமைக்குரிய விஷயம். பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை. நாளை புவனேஷ்வர் ரயில் நிலையத்துக்குச் சென்று ஆய்வு செய்கிறேன்” என்றார்.
முன்னதாக, ஒடிசாவில் மொத்தம் 25 நிலையங்களை உள்ளடக்கிய அம்ருத் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை தேசிய தலைநகரில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் மறுவடிவமைப்பு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பல மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் அல்லது ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களில் இருந்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின்படி, ஒடிசாவைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வந்தே பாரத் ரயிலில் இலவசமாகப் பயணிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
Electric Scooters : ரூ.49 ஆயிரத்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 3 வருட வாரண்டி - முழு விபரம் இதோ !!