பாகிஸ்தானில் இருந்து சென்னையை ஏவுகனைகளால் தாக்க முடியுமா.? வெளியான ஷாக் தகவல்

Published : May 07, 2025, 07:50 AM IST

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானை தாக்கியது. இதில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதாக அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

PREV
14
பாகிஸ்தானில் இருந்து சென்னையை ஏவுகனைகளால் தாக்க முடியுமா.? வெளியான ஷாக் தகவல்
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீரில் உள்ள பஹல்காம்  என்ற இடத்தில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொண்டதில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பிற்கு பதிலடி கொடுக்க இந்தியா களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுத்துள்ளது.

அந்த வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், பாகிஸ்தானியர்களை வெளியேற்ற உத்தரவு, சமூகவலைதளங்கள் முடக்கம் என தீவிர நடவடிகையில் இறங்கிய இந்தியா, இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகை நிகழ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

24
தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கிய இந்திய

இதனையடுத்து அனைத்து மாநில அரசுகளும் இதற்கான தீவிர நடவடிக்கையில் மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு தீவிரவாதிகளை குறிவைத்து இந்தியா பாகிஸ்தான் பகுதியை தாக்கியது.  இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கியது, முசாஃபராபாத், கோட்லி மற்றும் பஹவால்பூரின் அகமது கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் குறைந்தது 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 60 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

34
தாக்குதலுக்கு தயாராகும் பாகிஸ்தான்

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவமும் இந்தியாவை தாக்க திட்டமிட்டு வருகிறது.  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில்,  இந்தியா திணித்த இந்தப் போர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் வலுவாக பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளார். எனவே எந்த நேரத்திலும், எப்போதும் தாக்குவோம் என கூறியிருந்தார்.  இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கடைகோடியில் உள்ள தமிழகத்தை குறிவைத்து தாக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

44
சென்னையை தாக்க முடியுமா.?

அந்த வகையில், பாகிஸ்தானிலிருந்து சென்னை வரை உள்ள தூரம் சுமார் 1,800 கி.மீட்டார் ஆகும். தற்போது பாகிஸ்தானிடம் சாஹீன் - 2 மற்றும் அபபீல் போன்ற ஏவுகணைகள், 1,500 முதல் 2,200 கி.மீ. வரை உள்ள இலக்கை தாக்கி அழிக்க முடியும். எனவே சென்னையை தாக்கும் வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது.

அதே நேரத்தில் இந்தியாவில் அதிநவீன ஆயுதங்களும், ஏவுகனைகளை நடுவானில் அழிக்கும் சக்தியும், ரேடார் அமைப்பும் உள்ளது .இருந்த போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories