பீரங்கித் தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது? பள்ளிகளில் போர் பாதுகாப்பு ஒத்திகை!

Published : May 06, 2025, 03:55 PM IST

எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் காரணமாக, ஜம்முவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு போர் மற்றும் மோதல் நேரங்களில் உயிர் பிழைப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

PREV
14
பீரங்கித் தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது? பள்ளிகளில் போர் பாதுகாப்பு ஒத்திகை!
Jammu Schools To Conduct Wartime Survival Training

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பினாமி குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. 
 

24
பள்ளிகளில் போர்க்கால பாதுகாப்பு பயிற்சி

பாகிஸ்தான் மீதான அனைத்து உறவுகளையும் துண்டித்த இந்தியா, 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு செய்தது போல் அந்த நாட்டுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை களையெடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முப்படைகளும் தயாராக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் நிலை எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொளும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

 

இந்த ஒத்திகையின்போது போர்க்காலத்தில் எழுப்பப்படுவது போல சைரன் ஒலியை எழுப்ப வேண்டும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். நாடு முழுவதும் 259 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் கல்வித் துறை, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) அமைந்துள்ள பள்ளிகளில் போர்க்கால பாதுகாப்பு பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

34
போர்க்காலங்களில் என்ன செய்ய வேண்டும்?

அதாவது பாகிஸ்தான் பதுங்கு குழிகளிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள துலாவாரி போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகள் உள்பட ஜம்முவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. போரின்போது என்ன செய்ய வேண்டும்? பீரங்கித் தாக்குதலில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? உள்ளிட்ட பல்வேறு போர் விஷயங்கள் குறித்து ராணுவ வீரர்கள், உள்ளூர் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகள் மாணவர்களிடம் ஒத்திகை செய்து காண்பித்தனர்.

44
இந்தியா-பாகிஸ்தான் எல்லை

மேலும் எதிரி நாடு குண்டுகளை வீசினால் எப்படி பதுங்கு குழிகளுக்குள் சென்று பதுங்குவது? உள்ளிட்டவை குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. பாகிஸ்தான் பதுங்கு குழிகளிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள துலாவாரி கிராமத்தில் இரண்டு பதுங்கு குழிகள் மட்டுமே உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு இது மட்டும் போதாது. எனவே அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக கூடுதல் பதுங்கு குழிகள் மற்றும் வலுவூட்டப்பட்ட தங்குமிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துமாறு ஜம்மு காஷ்மீர் கல்வியாளர்களும், பெற்றோர்களும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories