மேலும் வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாட்டின் அதிவேக ரயில்களில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் இடம்பிடிக்க உள்ளது. இந்தியன் ரயில்வே 2025-26 நிதியாண்டில் பல்வேறு வழித்தடங்களில் 50 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் சென்னை மற்றும் ஹவுரா இடையே ஒரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
ஹவுரா-சென்னை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினம் வழியாக பயணித்து வெறும் 26 மணி நேரத்திற்குள் 1,662 கி.மீ தூரத்தை கடக்கும். இந்த ரயில் ஹவுராவிலிருந்து சென்னைக்கு கோரக்பூர் சந்திப்பு, பாலேஷ்வர், பத்ராக், கட்டாக், புவனேஸ்வர், குர்தா சாலை சந்திப்பு, விஜயநகர், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா சந்திப்பு, தெனாலி சந்திப்பு, ஓங்கோல் மற்றும் கூடூர் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.