யார் இந்த கமலா பூஜாரி? நெல் ரகங்களை அழியாமல் காப்பாற்ற வாழ்க்கையை அர்ப்பணித்த மூதாட்டி!

First Published | Jul 20, 2024, 6:19 PM IST

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பெண் விவசாயி கமலா பூஜாரி சனிக்கிழமை காலமானார். 100 க்கும் மேற்பட்ட நெல் வகைகளை பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், பல வகையான மஞ்சள், சீரகம் போன்றவற்றையும் பாதுகாத்து வந்தார்.

Kamala Pujari

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பெண் விவசாயி கமலா பூஜாரி சனிக்கிழமை காலமானார். 73 வயதான அவர் முதுமையினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்காக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.

Kamala Pujari

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பத்ராபுட் கிராமத்தில் பிறந்த பரோஜா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் கமலா பூஜாரி. இயற்கை விவசாயம் மற்றும் உள்நாட்டு நெல் வகைகளைப் பாதுகாப்பதில் புரிந்த சேவைக்காக உலக அளவில் பாராட்டப்பட்டவர்.

Tap to resize

Kamala Pujari

100 க்கும் மேற்பட்ட நெல் வகைகளை பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், பல வகையான மஞ்சள், சீரகம் போன்றவற்றையும் பாதுகாத்து வந்தார். 'திலி', 'மச்சகந்தா', 'புலா' மற்றும் 'கனாட்டியா' போன்ற அரிய நெல் வகைகளையும் கமலா பூஜாரி அழியாமல் காபாற்றியுள்ளார்.

Kamala Pujari

வெறுங்காலுடன் பல கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இயற்கை விவசாயம், இயற்கை உரங்களின் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தார். 2019ஆம் ஆண்டில் விவசாயத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.

Kamala Pujari

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 2002 இல் ஈக்வேட்டர் இனிஷியேட்டிவ் விருது (Equator Initiative Award) கமலா பூஜாரிக்கு அளிக்கப்பட்டது.

Kamala Pujari

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட திட்டத்தில் கமலா பூஜாரி ஒரு தலைவராக இருந்தார். அப்போது 1994ஆம் ஆண்டு கோராபுட்டில் அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் உயர்தர நெல் வகையான ‘கலாஜீரா’ உருவாக்கப்பட்டது.

Kamala Pujari

2018ஆம் ஆண்டில் ஒடிசா மாநில திட்டமிடல் குழுவில் உறுப்பினராகவும் பங்காற்றி இருக்கிறார் கமலா. 2004ஆம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தால் சிறந்த விவசாயி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். புவனேஸ்வரில் உள்ள ஒடிசாவின் முதன்மையான விவசாய ஆராய்ச்சி நிறுவனமான ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த விருதை வழங்கியது.

Kamala Pujari

கமலா பூஜாரியின் முயற்சியால், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) 2012 இல் கோராபுட்டை உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவசாய பாரம்பரிய தளமாக (GIAHS) அறிவித்தது.

Latest Videos

click me!