Aanvi Kamdar | ரசிகர்களை கவர மலை உச்சியில் ரீல்ஸ் வீடியோ; பெண் இன்ஸ்டா பிரபலத்தின் உயிரை குடித்த ரீல்ஸ் மோகம்

Published : Jul 18, 2024, 06:27 PM ISTUpdated : Jul 18, 2024, 06:30 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அன்வி கம்தார் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது 300 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

PREV
16
Aanvi Kamdar | ரசிகர்களை கவர மலை உச்சியில் ரீல்ஸ் வீடியோ; பெண் இன்ஸ்டா பிரபலத்தின் உயிரை குடித்த ரீல்ஸ் மோகம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அன்வி கம்தார் (வயது 26). பட்டய கணக்கரான இவர் பல்வேறு பிரபலமான இடங்களுக்குச் சென்று வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

26

இதன் மூலம் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் 2.5 லட்சத்திற்கும் மேல் சென்றது. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அவர்களை தக்க வைக்க புதுப்புது இடங்களுக்கு சென்று வீடியோ பதிவு செய்துள்ளார்

36

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கும்பே நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.

46

நீர்வீழ்ச்சியில் தன்னை மறந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த போது கால் தவறி 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். உடனடியாக அவரது நண்பர்கள் காவல் துறையினருக்கும், தகவல் தெரிவித்தனர்.

56

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் 6 மணி நேரம் போராடி இளம் பெண்ணை மீட்டனர். இதனைத் தொடர்ந்து அருகே உள்ள மங்கான் தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே இளம் பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

66

இளம் பெண்ணின் மரண செய்தி அவரது நண்பர்கள் மட்டுமல்லாது அவரை பின்தொடர்பவர்களும் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories