வெறுத்துப் போன மக்கள்... ஜியோ, ஏர்டெல்லுக்கு குட்-பை! BSNL ஐ தேடிச் செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!
First Published | Jul 18, 2024, 5:27 PM ISTரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்திய பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்வது அதிகரித்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் கட்டணங்களை 11-25 சதவீதம் வரை உயர்த்தின. இதனால் சமூக ஊடகங்களில் 'BSNL ki ghar wapsi', 'BoycottJio' போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளன.
இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு, சுமார் 2,50,000 பேர் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (எம்என்பி) வசதியை பயன்படுத்தி பிஎஸ்என்எல்-க்கு மாறியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கட்டணங்கள் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு கட்டுப்படி ஆகும் அளவில் உள்ளது.
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர பிளான் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.3,599 விலையில் கிடைக்கிறது. அதே அளவு டேட்டாவுடன் (தினமும் 2GB) 395 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.2,395 மட்டுமே.
பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் புதிய குறைந்தபட்ச 28 நாள் பிளான் விலை ரூ.199. ரிலையன்ஸ் ஜியோ இதே பிளானை ரூ.189 க்குக் கொடுக்கிறது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இதேபோன்ற திட்டத்தை ரூ.108 முதல் பெற முடியும்.
BSNL ரூ.107 முதல் ரூ.199 வரை பல மாதாந்திரத் திட்டங்களை வைத்திருக்கிறது. அன்லிமிட்டட் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் சில OTT சேவைகளை உள்ளடக்கிய பேக்கை ரூ.229 க்குத் தருகிறது.