Ambani : ஆனந்த் & ராதிகா திருமணம்.. ஆனால் அதற்கு முன் ஒரு "பெரிய விஷயம்" செய்த அம்பானி குடும்பம் - என்ன அது?

First Published | Jul 2, 2024, 6:31 PM IST

Mukesh Ambani : முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.

Pre Wedding in Cruise Ship

கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி அவர்களுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்சண்ட்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மகனின் ப்ரீ வெட்டிங் நிகழ்வுக்கே ரூ.1200 கோடி செலவு செய்த அம்பானி.. அப்ப திருமணத்திற்கு எத்தனை கோடி?

Radhika merchant

அதன் பிறகு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டு கடற்கரையில் மூன்று நாட்கள் சொகுசு கப்பலில் இந்த தம்பதியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் பல முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர்.

Tap to resize

Nita Ambani

இந்நிலையில் முகேஷ் மற்றும் நிதா அம்பானி, இன்று செவ்வாயன்று மும்பையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் மஹாராஷ்டிராவில் உள்ள பால்கரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்களின் மகனின் திருமணத்திற்கு முன்னதாக இந்த நிகழ்வை அவர்கள் செய்துள்ளனர்.

Ambani

முகேஷ் அம்பானி, நிதா அம்பானி, அவர்களது மூத்த மகனும், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவருமான ஆகாஷ், மருமகள் ஷ்லோகா அம்பானி, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைவர் மகள் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

ஏழை ஜோடிகளுக்கு பிரம்மாண்ட திருமணம்.. அம்பானி குடும்பத்தின் விழா நடைபெறும் இடம் திடீர் மாற்றம்..

Latest Videos

click me!