மிகக் குறைந்த வயதில் எம்.பி.யான இளம் பெண்கள்! வெறும் 25 வயதில் மக்கள் மனதை வென்று சாதனை!

First Published | Jun 5, 2024, 2:20 PM IST

மக்களவைத் தேர்தலில் 25 வயதே ஆன நான்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் புதிய நாடாளுமன்றத்தின் இளம் உறுப்பினர்களாக செயல்பட உள்ளனர்.

Member of Parliament, Youngest Candidates, Youngest MPs, Lok Sabha elections, Lok Sabha election results, Pushpendra Saroj, Priya Saroj, Samajwadi Party, Shambhavi Choudhary, Sanjana Jatav, Lok Janshakti, LJP, Congress

25 வயதான நான்கு வேட்பாளர்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வாகி உள்ளனர். புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டனர். சாம்பவி சவுத்ரி லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) சார்பில் போட்டியிட்டார். சஞ்சனா ஜாதவ் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

Member of Parliament, Youngest Candidates, Youngest MPs, Lok Sabha elections, Lok Sabha election results, Pushpendra Saroj, Priya Saroj, Samajwadi Party, Shambhavi Choudhary, Sanjana Jatav, Lok Janshakti, LJP, Congress

சாம்பவி சௌத்ரி

பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அசோக் சவுத்ரியின் மகள் சாம்பவி சவுத்ரி. இவர் சமஸ்திபூர் தொகுதியில் காங்கிரஸின் சன்னி ஹசாரியை கடும் போட்டிக்கும் மத்தியில் தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளரான சன்னி ஹசாரியும் ஜேடியூ அமைச்சர் மகேஷ்வர் ஹசாரியின் மகன்தான்.

நரேந்திர மோடி முன்னதாக இத்தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது, சாம்பவியை என்.டி.ஏ. கூட்டணியின் இளம் வேட்பாளர் என்று பாராட்டிப் பேசினார்.

Latest Videos

Member of Parliament, Youngest Candidates, Youngest MPs, Lok Sabha elections, Lok Sabha election results, Pushpendra Saroj, Priya Saroj, Samajwadi Party, Shambhavi Choudhary, Sanjana Jatav, Lok Janshakti, LJP, Congress

பிரியா சரோஜ்

பிரியா சரோஜ் மச்சிலிஷாஹர் தொகுதியில் 35,850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பாஜகவின் சிட்டிங் எம்பியான போலாநாத்தை எதிர்த்து போட்டியிட்டார். பிரியா மூன்று முறை எம்பியாக இருந்த தூபானி சரோஜின் மகள் ஆவார்.

Member of Parliament, Youngest Candidates, Youngest MPs, Lok Sabha elections, Lok Sabha election results, Pushpendra Saroj, Priya Saroj, Samajwadi Party, Shambhavi Choudhary, Sanjana Jatav, Lok Janshakti, LJP, Congress

சஞ்சனா ஜாதவ்

ராஜஸ்தானின் பரத்பூர் தொகுதியில் சஞ்சனா ஜாதவ் வெற்றி பெற்றார். 25 வயதான இவர் பாஜகவின் ராம்ஸ்வரூப் கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இவர் 2023 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் பாஜகவின் ரமேஷ் கேடியிடம் வெறும் 409 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சஞ்சனாவின் கணவர் கப்டன் சிங் ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருக்கிறார்.

Member of Parliament, Youngest Candidates, Youngest MPs, Lok Sabha elections, Lok Sabha election results, Pushpendra Saroj, Priya Saroj, Samajwadi Party, Shambhavi Choudhary, Sanjana Jatav, Lok Janshakti, LJP, Congress

புஷ்பேந்திரா சரோஜ்

புஷ்பேந்திர சரோஜ், முன்பு பாஜக வசம் இருந்த கௌசாம்பி நாடாளுமன்றத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக அரசியல் களத்தில் நுழைந்தார். இவர் 103,944 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக எம்பி வினோத் குமார் சோங்கரை தோற்கடித்து வெற்றி பெற்றார். புஷ்பேந்திரா 5 முறை எம்எல்ஏவாக இருந்தவரும், உத்தரபிரதேச முன்னாள் அமைச்சருமான இந்தர்ஜித் சரோஜின் மகன் ஆவார்.

click me!