Mystery : பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் ரகசியம் என்ன? குவிந்து கிடக்கும் தங்கத்தின் மதிப்பு எவ்வளவு.?

First Published May 24, 2024, 9:54 AM IST

ஒடிஷா பூரி ஜெகநாத் கோயிலின் பொக்கிஷ அறையில் குவிந்து கிடக்கும் தங்கங்கள் தொடர்பாகவும், மர்மான முறையில் காணமல் போன பொக்கிஷ அறையின் சாவி தொடர்பாகவும் குழப்பமான நிலை உருவாகியுள்ளது. 

Puri Jagannath

பூரி ஜெகந்நாதர்-பொக்கிஷ அறை

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்காக ஒடிசாவிற்கு சென்ற பிரதமர் மோடி, பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனது தொடர்பாக விமர்சித்து பேசினார். அப்போது “நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை. 

puri jagannath temple

பூரி ஜெகந்நாதர் ரகசிய அறை சாவி எங்கே.?

இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்” என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் வலது கரமாக பார்க்கப்படும் வி.கே.பாண்டியனை குறிவைத்து பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் ரகசியம் என் என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

Latest Videos


விலை மதிப்பற்ற ஆபரணங்கள்

12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மன்னர்கள் வெள்ளி, தங்கம், வைரம், வைடூர்யம் என ஏராளமான விலை மதிப்பற்ற ஆபரணங்களை காணிக்கையாக அளித்தனர். பக்தர்களும் பல்வேறு நகைகளை தானமாக வழங்கியுள்ளனர். இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே அமைந்துள்ள ரகசிய அறையான ரத்ன பண்டார் என்ற பொக்கிஷ அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இரண்டு பொக்கிஷ அறை உள்ள நிலையில் ஒரு அறையில் உள்ள நகைகள் கடவுளுக்கு திருவிழாக்காலங்களில் அணிவிக்கப்பட்டு மீண்டும் பாதுகாக்கப்படும் அறை. இதில் உள் அறையான பிடார் பண்டார், கடந்த 38 ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை.

பொக்கிஷ அறையில் இருந்தது என்ன.?

கடைசியாக 1978இல் திறக்கப்பட்டது. அப்போது அதை அருகில் இருந்து கண்ணால் பார்த்த ரபீந்திர நாராயண் மிஸ்ரா என்ற ஊழியர், நகைகள் அனைத்தும் துணியில் சுற்றி மரப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 1978ல் கணக்கெடுத்தபோது, பொக்கிஷ அறையில் 149.609 கிலோ தங்க நகைகளும் 258 கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் இருப்பதாக ஒடிசா சட்டமன்றத்தில் தெரிவித்தது.

சீறும் பாம்புகள்

இதனையடுத்து தொல்லியல் துறையினர் மீண்டும் அந்த பொக்கிஷ அறையை திறந்து உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் ரகசிய அறையானது மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளே பாம்புகள் கூட்டம் இருப்பதாகவும் தொல்லியல் துறை அதிகாரிகளால் கூறப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.  இந்தநிலையில் தான் நீதிமன்ற உத்தரவின் படி ரத்ன பண்டாரின் உள் அறையைத் திறக்க 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சாவி கிடைக்கவில்லை என்பதால் அறை திறக்கப்படவில்லை. 
 

puri jagannath

விரைவில் திறக்கப்படும் பொக்கிஷ அறை

இந்த சாவி எங்கே சென்றது என்ற கேள்வி ஒடிசா மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் வசம் உள்ள சாவி காணாமல் போனது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பொது நல வழக்கை விசாரித்த ஒடிஷா உயர் நீதிமன்றம், மாநில அரசு ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்து ரத்ன பண்டாரில் உள்ள பொருட்களைக் கணக்கெடுக்க உத்தரவிட்டது. எனவே தேர்தல் முடிவுக்கு பிறகு ரகசிய பொக்கிஷ அறையில் இருக்கும் தங்க ஆபரணங்களின் மதிப்பு வெளியுலகிற்கு தெரியும் என நம்பப்படுகிறது. 

click me!