பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவை திருமணம் செய்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் யார்?

Published : Mar 06, 2025, 06:59 PM ISTUpdated : Mar 06, 2025, 07:02 PM IST

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கும் பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் திருமணம் நடந்தது. இந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

PREV
14
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவை திருமணம் செய்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் யார்?

Tejasvi Surya- Sivasri Skandaprasad Married: பெங்களூரு தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு வியாழக்கிழமை கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துடன் திருமணம் நடந்தது. கன்னடம் மற்றும் தமிழ் பாரம்பரியப்படி தேஜஸ்வியும், சிவஸ்ரீயும் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் யார்?

சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஒரு கர்நாடக பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞர். அவர் 1996 இல் பிறந்தார். அவர் மிருதங்க வித்வான் ஸ்ரீ ஜே. ஸ்கந்தபிரசாதின் மகள்.ஆவார். சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஒரு பாடகி மட்டுமல்ல, அவர் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். 

 

24
மாடலிங் செய்வதில் ஆர்வமுள்ளவர் சிவஸ்ரீ

சிவஸ்ரீ பன்முக திறமை கொண்டவர். ஓவியம் மற்றும் மாடலிங் செய்வதில் அவருக்கு ஆர்வம் உண்டு. அவர் ஓவியம் வரைவதை வரும்புவது மட்டுமல்லாமல், பகுதி நேர மாடலாகவும் இருக்கிறார்.

மணிரத்னம் படத்தில் பாடியுள்ள சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்

சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திரைப்பட தயாரிப்பாளர் மணிரத்னத்தின் பிரபலமான 'பொன்னியின் செல்வன்' (பிரான்சைஸ்) திரைப்படத்தில் பாடல்கள் பாடியுள்ளார்.

தமிழ்நாட்டுப் பெண்ணை மணந்தார் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா!

34
முதுகலைப் பட்டம்

படிப்பிலும் சிறந்து விளங்கிய சிவஸ்ரீ

சிவஸ்ரீ சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார். அவர் சமஸ்கிருத மாணவி மற்றும் பிவிஏ ஆயுர்வேத மருத்துவமனையில் ஆயுர்வேத அழகுசாதனவியல் டிப்ளமோ பெற்றுள்ளார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

44
திருமண விழாவில் பங்கேற்றவர்கள் யார்?

தேஜஸ்வி - சிவஶ்ரீ திருமணத்தில் மத்திய அமைச்சர் வி. சோமண்ணா, எம்.பி. சி.என். மஞ்சுநாத், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வினய் குருஜி, முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமண விழாவில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறுப்பினர்களும், நெருங்கிய அரசியல் பிரமுகர்களும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பிளாக்மெயில் செய்து தங்கக் கடத்தலில் ஈடுத்தினார்கள்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

click me!

Recommended Stories