தமிழ்நாட்டுப் பெண்ணை மணந்தார் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா!

Published : Mar 06, 2025, 12:48 PM ISTUpdated : Mar 06, 2025, 03:30 PM IST

Tejasvi Surya Sivasri Skandaprasad Wedding: பாஜக இளைஞர் அணித் தலைவரும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா மற்றும் பாடகர் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் திருமணம் பெங்களூரில் நடைபெற்றது. விழாவில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

PREV
18
தமிழ்நாட்டுப் பெண்ணை மணந்தார் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா!
Tejasvi Surya Sivasri Skandaprasad Wedding

பாஜக இளைஞர் அணித் தலைவரும் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யாவும், தமிழ்நாட்டின் பிரபல பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் திருமணம் செய்து கொண்டனர். பெங்களூரு கனகபுரா சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

28
Tejasvi Surya Sivasri Wedding

தேஜஸ்வி சூர்யாவும் சிவஸ்ரீயும் இன்று காலை 10.45 மணிக்கு துலா லக்னத்தில் திருமணம் செய்துகொண்டனர். இன்று, பெங்களூரு கிரிநகரில் உள்ள சஞ்சய் இல்லத்தில் திருமணச் சடங்குகள் நடைபெறுகின்றன. முன்னதாக, புதன்கிழமை மாலை முதல் ரிசார்ட்டில் பல்வேறு திருமண சடங்குகள் நடந்தன.

போஸ்ட் ஆபிஸில் லோன் ஈசியா கிடைக்கும்! வட்டி எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி?

38
Tejasvi Sivasri Marriage

தேஜஸ்வி - சிவஶ்ரீ திருமணத்தில் மத்திய அமைச்சர் வி. சோமண்ணா, எம்.பி. சி.என். மஞ்சுநாத், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வினய் குருஜி, முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

48
Tejasvi Surya Wedding Photos

இரு குடும்பங்களின் நெருங்கிய உறுப்பினர்களும், நெருங்கிய அரசியல் பிரமுகர்களும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தேஜஸ்வி சூர்யாவும் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

மீண்டும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் தோனி!

58
Sivasri Skandaprasad Wedding Photos

முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா தனது நண்பர் தேஜஸ்வி சூர்யாவின் திருமணத்தில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். புதுமணத் தம்பதிகளுக்கும் பிரதாப் சிம்ஹா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

68
Tejasvi Surya - Sivasri Marriage Reception

மார்ச் 9ஆம் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உள்ள காயத்ரி விஹாரில் தேஜஸ்வி சூர்யா மற்றும் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் ஆகியோருக்கு பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கர்நாடகா மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

வருமான வரித்துறை சோஷியல் மீடியா கணக்கையும் ஆய்வு செய்யலாம்! புதிய விதியில் பிரைவசி மீறலா?

78
Tejasvi Surya and Sivasri Skandaprasad

பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ ஷோவின்போது எம்பி தேஜஸ்வி சூர்யா தனது வருங்கால மனைவியுடன் கலந்துகொண்டார். பின்னர், அவர் ஆதிசுஞ்சனகிரி மடத்தின் நிர்மலானந்த சுவாமிஜியைச் சந்தித்து அவரது ஆசிகளைப் பெற்றார். வாழும் கலை அமைப்பின் ஒரு நிகழ்விலும் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர்.

88
Who Sivasri Skandaprasad?

தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்னாடக இசைப் பாடகரான சிவஸ்ரீ, பரதநாட்டியக் கலைஞரும் கூட. அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் பட்டம் பெற்றுள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்போது சிவஸ்ரீ பாடிய ராமரைப் பற்றிய பாடலைப் பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து பாராட்டி இருந்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories