Heat Wave: சென்னை, பெங்களூரு, மும்பையில் போட்டுத் தாக்கும் வெயில்! என்ன காரணம்?

Published : Mar 04, 2025, 11:18 AM IST

இந்தியா முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை, பெங்களுரூ, மும்பையில் வெயில் போட்டுத் தாக்கி வருகிறது. இதற்கு என்ன காரணம்? என்று பார்ப்போம்.

PREV
14
Heat Wave: சென்னை, பெங்களூரு, மும்பையில் போட்டுத் தாக்கும் வெயில்! என்ன காரணம்?
heat wave north india

Heat Wave: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வழக்கத்துக்கு மாறாக வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு இதமான குளிர்ச்சியான காலநிலைக்கு பெயர் பெற்றது. அங்கு கடந்த சில நாட்களாக 30 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பெங்களூருவில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சிஸ் ஆகவும் உள்ளது.

24
இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப நிலை

வழக்கமாக ஆண்டின் இந்த நேரத்தில், பெங்களூருவில் வடகிழக்கு காற்று வீசி குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த முறை வெயில் கடுமையாக கொளுத்துகிறது. இதேபோல் சென்னையிலும் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. சென்னையில் வெயில் அடிக்கும் என்றாலும் இந்த முறை வெயில் கடுமையாக் கொளுத்தி வருகிறது. 30 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வருகிறது. 

இது மட்டுமின்றி நாட்டின் பெரிய நகரமான மும்பையிலும் வெயில் கடுமையாக உள்ளது. குளிர்கால மாதங்களில் கூட மும்பையில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. ஜனவரி மாதம் மூன்றாவது அதிகப்பட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உபியில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டம்!

34
அதிகரிக்கும் வெப்ப நிலை

மார்ச் முதல் மே வரை இந்தியாவில் கடுமையான வெப்பம் இருக்கும் என்றும் மும்பை தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது. அதிகரித்து வரும் வெப்பநிலை காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. வெப்பத் தாக்கத்திற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்வேறு மாநிலங்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் வானிலை மிகவும் கணிக்க முடியாமல் உள்ளது. சில பகுதிகளில் மழை பெய்யும் அதே வேளையில் மற்ற பகுதிகளில் கடுமையான வெப்பம் நீடிக்கும். இந்த ஒழுங்கற்ற வானிலை முறை ஒரு எச்சரிக்கை அறிகுறியாக செயல்படுகிறது. டெல்லியில் சமீபத்திய மழைப்பொழிவு ஓரளவு நிம்மதியை அளித்தாலும், பல பகுதிகள் இன்னும் உயர்ந்து வரும் வெப்பநிலையுடன் போராடி வருகின்றன. மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து வானிலை ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

44
இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் மார்ச் முதல் மே வரை சராசரியை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. “காலநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு டிகிரி அதிகரித்து வருகிறது. இந்த மாறிவரும் காலநிலை நிலைமை இந்தியாவுக்கு பெரும் சவாலாக உள்ளது'' என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இந்த கோடை காலத்தில் சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பது, தண்ணீர் மற்றும் திரவங்களுடன் நன்கு நீரேற்றமாக இருப்பது மற்றும் கடுமையான வெப்பத்தின் விளைவுகளைத் தணிக்க தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது குறித்து பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதிய கல்விக்கொள்கையில் 2 இந்திய மொழிகளைக் கற்கலாம்: பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்!

Read more Photos on
click me!

Recommended Stories