விக் கிராஃப்ட் மூலமா கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு 1,600 கிலோமீட்டர் போறதுக்கு ஒரு சீட்டுக்கு 600 ரூபாய் தான் செலவாகும்னு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 1,500 ரூபாய்க்கு மேல இருக்கிற ஏசி த்ரீ-டயர் ரயில் டிக்கெட்டை விட ரொம்ப கம்மின்னு வாட்டர்ஃப்ளை சிஇஓவும், நிறுவனருமான ஹரீஷ் ராஜேஷ் மணிகண்ட்ரோலுக்கு கொடுத்த பேட்டியில சொல்லியிருக்காரு.
தண்ணியில இருந்து பறந்து நாலு மீட்டர் உயரத்துல இந்த சீக்ளைடர்கள் பறக்க முடியும்னு அவர் சொல்லியிருக்காரு. அதனால எந்த ஏர்போர்ட் மாதிரியான வசதியும் தேவையில்லை. இது மட்டும் இல்லாம தண்ணி, ஐஸ், பாலைவனம் இல்ல வேற எந்த இடத்துலயும் இது பறக்க முடியும். இந்த சீக்ளைடர்களை ஏர்லைன் நிறுவனங்களுக்கு விற்க வாட்டர்ஃப்ளை திட்டமிட்டுள்ளதாக ரிப்போர்ட்ஸ் சொல்லுது. 2029க்குள்ள துபாய்-லாஸ் ஏஞ்சல்ஸ், சென்னை-சிங்கப்பூர் மாதிரியான இன்டர்நேஷனல் ரூட்ஸையும் வாட்டர்ஃப்ளை மேப் பண்ணும்னு சொல்றாங்க.
ஏர்லைன் ஆபரேட்டர்களுக்கு இந்த சீக்ளைடர்களை செஞ்சு விக்கிறதோட, ராணுவ தேவைக்கும் பயன்படுத்த வாட்டர்ஃப்ளை திட்டமிட்டிருக்காங்க. தண்ணிக்காக டிசைன் பண்ணிருந்தாலும், இது ஐஸ், பாலைவனம் இல்ல எந்த தடையில்லாத இடத்துலயும் பறக்க முடியும்னு ஹரீஷ் ராஜேஷ் சொல்லியிருக்காரு.