ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

Published : Mar 05, 2025, 12:01 PM ISTUpdated : Mar 05, 2025, 12:18 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸி., அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

PREV
16
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித்!
Steve Smith retirement from ODI cricket

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் கூறியுள்ளார். 

26
Steve Smith and Virat Kohli

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அரையிறுதி போட்டியில் ஆஸி., அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார். போட்டிக்குப் பிறகு ஸ்மித் தனது சக வீரர்களிடம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஸ்மித் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார்.

36
Steve Smith ODI records

2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லெக் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டராக அறிமுகமான ஸ்மித் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.28 சராசரியுடன் 5800 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும். மேலும் 28 விக்கெட்டுகளையும் ஸ்டீவ் ஸ்மித் வீழ்த்தியுள்ளார்.

46
Australian Cricketer Steve Smith

2015 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிகளில் ஸ்மித் இடம்பெற்றார். 2015 இல் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனார். நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பேட் கம்மின்ஸ் காயமடைந்து விளையாட முடியாமல் போனதால், இடைக்கால கேப்டன் பதவியை வகித்தார்.

56
Steve Smith Announces Retirement

"இது சிறந்த பயணமாக இருந்தது. ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன்," என்று ஸ்மித் கூறியுள்ளார். "பல அற்புதமான நேரங்களும் அருமையான நினைவுகளும் இருந்திருக்கின்றன. இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது, மற்ற அணிகளின் பல அற்புதமான வீரர்களுடன் சேர்ந்து பயணித்தது ஆகியவை சிறந்த அனுபவமாக இருந்தன" என அவர் குறிப்பிட்டார்.

66
Steve Smith in Fab Four

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தொடரின்போது ஸ்டீவ் ஸ்மித்தின் வயது 38 ஆக இருக்கும். அப்போது அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் நிலையில் இருப்பாரா என்பது நிச்சயம் இல்லை. இதனால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை மனதில் வைத்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories