அம்மாடியோவ்! ரயில் சக்கரத்தின் எடை இவ்வளவா? 10 பேர் சேர்ந்தா கூட அசைக்க முடியாது போலயே!

நீங்கள் ஒருமுறையாவது கண்டிப்பாக ரயிலில் பயணம் செய்து இருப்பீர்கள். இந்த செய்தியில் ரயில் சக்கரங்களின் எடை என்ன? ஒரு ரயில் சக்கரத்துக்கு எவ்வளவு செலவாகிறது? என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Indian Trains

மக்களுடன் நெருக்கமான ரயில்கள் 

பொதுவாகவே யானை, கடல், ரயில் இந்த மூன்றையும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்று சொல்வார்கள். இதில் ரயில்கள் முதலிடம் பிடித்துள்ளன. என்னதான் இன்றைய காலம் நவீனமயமாகி விட்டாலும், இப்போதும் ரயில்வே கேட்கள் அடைக்கப்படும்போது ரயில் போகும் சத்ததை கேட்டு தலையை திருப்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 

அந்த அளவுக்கு ரயில்கள் மக்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ளன. பயணிக்க மிகவும் வசதியாக உள்ளதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களை பயன்படுத்துகின்றனர். நீங்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு தடைவையாது ரயிலில் பயணித்திருப்பீர்கள். அப்போது ரயில் செல்வதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் சக்கரங்களின் எடை எவ்வளவு இருக்கும் என யோசித்து இருக்கிறீர்களா? ரயில் சக்கரங்களின் எடை குறைத்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Train Wheels Weight

ரயில் சக்கரங்களின் எடை என்ன?

ஒரு ரயில் சக்கரத்தின் எடை மிக அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் 10 பேர் சேர்ந்து கூட அதை கைகளால் நகர்த்த முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்திய எஃகு ஆணையத்தின் கூற்றுப்படி, ரயில்களின் இன்ஜின் மற்றும் பெட்டிகளில் வெவ்வேறு எடைகள் கொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறு தொலைவில் இயக்கப்படும் MEMU, EMUஆகிய புறநகர் பயணிகள் ரயிலில் தான் அதிக எடை சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதாவது இந்த ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சக்கரத்தின் எடை 423 கிலோ ஆகும். இதற்கு அடுத்தபடியாக சாதாரண ரயில்களின் பெட்டியில் ஒரு சக்கரத்தின் எடை 384 முதல் 394 கிலோ வரை இருக்கும்.

ரூ.3,337 கோடி வருவாய்! இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையம் இது தான்!


Indian Railway

இன்ஜின் சக்கரங்கள் 

சிவப்பு LHB ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள சக்கரங்களின் எடை 326 கிலோ வரை இருக்கும் என இந்திய எஃகு ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன. ரயில்களுக்கு மூளையாக இருக்கும் இன்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ள சக்கரங்கள்,பெட்டிகளின் சக்கரங்களை விட மிகவும் கடினமானது. இதன் எடை அதிகமாக இருக்கும். அதாவது டீசல் இன்ஜின்களில் சக்கரங்களின் எடை சுமார் 528 கிலோ இருக்கும், மின்சார  இன்ஜின்களில் சக்கரங்களின் எடை 554 கிலோ ஆகும்.

Train Wheels Cost

ரயில் சக்கரங்களின் விலை இவ்வளவா?

அதே வேளையில் மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்படும் ரயில் சக்கரங்களின் எடை 144 கிலோ கொண்டதாக இருக்கும். ஒரு ரயில் சக்கரத்தின் விலை என்ன? என்பது குறித்து அடுத்து பார்க்கலாம். ஒரு சாதாரண பைக்குகளின் விலையை விட ரயில் சக்கரங்களின் விலை அதிகமாக உள்ளது. இந்தியாவில் ரயில் சக்கரங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படாததால் வெளிநாடுகளில் இருந்தே ரயில் சக்கரங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதனால் ஒரு ரயில் சக்கரத்துக்கு மட்டும் ரூ.70,000 செலவாகும் என்று ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு ரயில் பெட்டியில் எட்டு சக்கரங்கள் உள்ளன. இப்போது பெரும்பாலான ரயில்களில் 24 பெட்டிகள் வரை பொருத்தப்படுகின்றன. அப்படியானால் இன்ஜினுடன் சேர்த்து இந்த 24 பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள சக்கரங்களின் ஒட்டுமொத்த விலை எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

மகா கும்பமேளா 2025: பக்தர்களின் வசதிக்காக தை அமாவாசையில் 4 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

Latest Videos

click me!