Highest Earning Railway Station
இந்திய ரயில்வே என்பது நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக உள்ளது. உலகின் 4-வது பெரிய ரயில்வே நெட்வோர்க்காகவும், ஆசியாவின் 2-வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காவும் உள்ளது. சுமார் 68,000 கி.மீக்கு மேல் ரயில் பாதைகளை கொண்ட இந்தியாவில் 45,000 கிலோமீட்டருக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் உள்ளது. அதுமட்டுமின்றி, அரசாங்கத்தால் இயக்கப்படும் மிகப்பெரிய போக்குவரத்து முறையாகவும் இந்திய ரயில்வே உள்ளது.
பேருந்து, விமானம் என பல போக்குவரத்து முறை இருந்தாலும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களை சொல்லலாம். நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
Highest Earning Railway Station
இந்தியாவில் சுமார் 7000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. மேலும் நாட்டில் மொத்தம் சுமார் 22,000 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரி, இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையம் எது தெரியுமா? இந்த ரயில் நிலையத்திற்கு எத்தனை கோடி வருமானம் கிடைக்கிறது என்று தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, 2023-24 நிதியாண்டில் நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் மற்றும் பரபரப்பான ரயில் நிலையங்களில் புது தில்லி ரயில் நிலையம் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
Highest Earning Railway Station
2023-24 ஆம் ஆண்டில் புது தில்லி ரயில் நிலையம் 39,362,272 பயணிகளுடன் ரூ.3,337 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது, அதைத் தொடர்ந்து ஹவுரா ரூ.1,692 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
வருவாயில் முன்னணியில் இருப்பதோடு மட்டுமல்லாமல், புது தில்லி ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாக உள்ளது, ஆண்டு முழுவதும் 39,362,272 பயணிகள் பயணித்துள்ளனர்.
Highest Earning Railway Station
மேற்கு வங்கத்தின் ஹவுரா நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையங்களில் , சென்னையின் எம்ஜிஆர் சென்ட்ரல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. செண்ட்ரல் ரயில் நிலையம் ரூ.1299 கோடி ரயில் நிலையம் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ரயில் நிலையங்களும் முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளன, மேலும் ஆண்டு வருவாய் மற்றும் பயணிகள் வருகையில் ஒன்றாக எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
இந்திய ரயில்வே தரவுகளின்படி, மும்பையில் உள்ள லோக்மனாயா திலக் முனையம் 14,680,379 பயணிகளிடமிருந்து ரூ.1,036 கோடியை ஈட்டியுள்ளது. மும்பையின் CST ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களில் ஒன்றாகும், மேலும் 2024 ஆம் ஆண்டில் 51,652,230 பயணிகளிடமிருந்து ரூ.9,82 கோடி வருவாய் ஈட்டியது.
Highest Earning Railway Station
மகாராஷ்டிராவின் புனே ரயில் நிலையம் மற்றும் டெல்லியின் ஆனந்த் விஹார் ஆகியவை அதிக வருவாய் ஈட்டும் 100 நிலையங்களில் அடங்கும். புனே 22,256,812 பயணிகளின் வருகையிலிருந்து ரூ.9,76 கோடி வருடாந்திர வருவாய் ஈட்டியதாகவும், ஆனந்த் விஹார் 12,235,275 பயணிகளிடமிருந்து ரூ.8,44 கோடி வருவாய் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளது.