Wayanad: வயநாடு நிலச்சரிவு! தோண்ட தோண்ட சடலம்! கொத்து கொத்தாக உயரும் பலி எண்ணிக்கை! 200 பேரின் நிலை என்ன?

First Published | Aug 1, 2024, 8:11 AM IST

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

Kerala landslide

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி ஏற்பட்டுள்ள நிலச்சரிவு வரலாறு காணாத வகையில் மிக்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக முண்டக்கை, மேட்டுப்பட்டி, சூரல்மலை பகுதி பேரழிவை சந்தித்து இருக்கிறது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும் மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

,Wayanad landslides deaths

அங்கு தொடர்ந்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போதை நிலவரப்படி  வயநாடு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282ஆக உயர்ந்துள்ளது. 250 பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 

இதையும் படிங்க: Wayanad landslides: வயநாடு நிலச்சரிவு; பொதுமக்களிடம் உதவி கோரும் கேரளா அரசு

Tap to resize

Wayanad landslides rescue operations

மேலும் உயிரிழந்தவர்களில் 89 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 32 பேரின் உடல்கள் அவர்களது உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இதுவரை 143 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: முதல்வர் நிவாணர நிதிக்கு ரூ.5 கோடி வழங்கும் கௌதம் அதானி!

Wayanad Heavy Rain

அப்பகுதியில் கனமழை தொடர்ந்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Latest Videos

click me!