யஷ்வந்த்பூர், கர்வார் ரயில் சேவை ரத்து
யஷ்வந்த்பூரில் இருந்து மங்களூர் வழியாக கர்வார் செல்லும் எக்ஸ்பிரஸ்(ரயில் எண் 16515)சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கர்வாரிலிருந்து மங்களூர் வழியாக செல்லும் யஸ்வந்த்பூர் செல்லும் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ரயில் சேவையானது 30ஆம் தேதியும், 1ஆம் தேதியும், 3ஆம் தேதியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக யஷ்வந்தபூரில் இருந்து மங்களூர் செல்லும் ரயில் சேவையானது (ரயில் எண்16575) 30ஆம் தேதியும் ஒன்றாம் தேதியும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மங்களூரில் இருந்து யஷ்வந்த்பூருக்கு செல்லும் ரயில் சேவையானது 31ம் தேதியும், 2ஆம்தேதியும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.