ரூ.84 கோடிப்பே.. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர் இவர்தான்.. யாரு தெரியுமா?

First Published Jul 26, 2024, 1:48 PM IST

உலக அளவில் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து இமாலய வளர்ச்சி வளர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர் யார் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

Who is the Highest Paid Indian IT CEO

ஹெச்.சி.எல் (HCL) டெக்னாலஜிஸ் (HCLTech) இன் தற்போதைய CEO மற்றும் நிர்வாக இயக்குநரான சி.விஜயகுமார், 2024 நிதியாண்டில் ஒரு இந்திய ஐடி  நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ (CEO) ஆக உருவெடுத்துள்ளார்.

Highest Paid CEO

இதுகுறித்து ஹெச்.சி.எல் 2024 ஆண்டறிக்கையின்படி, ஹெச்.சி.எல் சிஇஓ விஜயகுமார் தனது வருடாந்திர ஊதியத்தின் ஒரு பகுதியாக 84.16 கோடி ரூபாய் ($10 மில்லியன்) சம்பாதித்தார். இது அவரது முந்தைய ஆண்டு வருவாயில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.

Latest Videos


HCL

இவரின் அடிப்படை சம்பளம் ரூ.16.39 கோடி ஆகும். அவரது செயல்திறன் சார்ந்த போனஸ் ரூ.9.53 கோடி ஆகும். நீண்ட கால ஊக்கத்தொகை (எல்டிஐ) ரொக்க கூறு ரூ.19.74 கோடி. LTI – RSU களின் பெர்கியூசிட் மதிப்பு ரூ.38.15 கோடி.

HCL Tech CEO

சலுகைகள் மற்றும் அலவன்ஸ்கள் போன்றவை ரூ.33 லட்சம் ஆகும்.  சி விஜயகுமாரின் சம்பளமானது 2023 இல் இருந்து கணிசமான மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அப்போது அவர் ரூ 28 கோடி ($3.46 மில்லியன்) சம்பாதித்தார்.  விஜயகுமாரின் ஹெச்.சி.எல் உடன் பயணம் 1994 இல் ஒரு மூத்த தொழில்நுட்ப பொறியாளராக தொடங்கியது.

HCL Tech C Vijayakumar

பல ஆண்டுகளாக, அவர் நிறுவனத்திற்குள் பல்வேறு பணிகளில் உயர்ந்தார், அக்டோபர் 2016 இல் அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் சி.விஜயகுமார்.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

click me!