விமான டிக்கெட் விலை ரூ.150 மட்டுமே.. இந்தியாவின் இந்த பகுதிகளுக்கு செல்ல உடனே புக் பண்ணுங்க!

First Published | Jul 28, 2024, 10:34 AM IST

இந்தியாவின் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே மலிவான விமானம் இயக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.150 மட்டுமே தான்.

Cheap Flight in India

வெறும் 150 ரூபாய்க்கு விமானப் பயணத்தை அனுபவிக்கலாம். ரூ.150க்கு எப்படி விமானத்தில் பயணம் செய்ய முடியும் என்பது பலருக்கும் எழும் கேள்விதான். ஆனால் அது உண்மைதான் மக்களே. இந்தியாவில் இரண்டு நகரங்களுக்கு இடையே விமானக் கட்டணம் மிகக் குறைவாக இருப்பதால், பைக் அல்லது காரில் பயணம் செய்வதற்குப் பதிலாக விமானத்தில் பயணம் செய்யலாம்.

Cheapest Flights

இந்த இரண்டு நகரங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். நாட்டிலேயே மலிவான விமானம் இந்தியாவின் இரண்டு அழகான நகரங்களான கவுகாத்தி மற்றும் ஷில்லாங் இடையே இயங்குகிறது, இதன் கட்டணம் ரூ. 150 மட்டுமே. இந்த விமானம் அலையன்ஸ் ஏர் மூலம் இயக்கப்படுகிறது. அலையன்ஸ் ஏர் என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்கும் ஒரு பிராந்திய விமான நிறுவனம் ஆகும்.

Latest Videos


Flights

பேடிஎம் செயலியில் இந்த விமானத்தின் கட்டணத்தை சரிபார்க்கும்போது, ரூ.150 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. குவஹாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்குச் செல்ல அடிப்படைக் கட்டணம் ரூ. 400. ஆனால் நீங்கள் ப்ரோமோ கோடைப் பயன்படுத்தினால் 250 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் பிளைட் டிக்கெட் விலை ரூ.150 ஆக மாறும்.

Air Fare

மேலும் முன்பதிவு செய்யும் போது வசதிக்கான கட்டணம் தனியாக சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும். கவுகாத்திக்கும் ஷில்லாங்கிற்கும் இடையே உள்ள தூரம் மிகக் குறைவாகும். அலையன்ஸ் ஏர் போன்ற குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் இந்த வழித்தடத்தில் விமானங்களை இயக்குகின்றன.

Airport

எனவே நீங்கள் கவுகாத்தி மற்றும் ஷில்லாங் இடையே பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த மலிவான விமானம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், மறக்கமுடியாத பயண அனுபவத்தையும் உங்களுக்கு வழங்கும் என்பதில் மாற்றமில்லை.

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

click me!