கே.டி. ராம ராவ்
மறுபுறம், தெலங்கானாவின் BRS கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராம ராவ், “விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைக்கவில்லை, இதற்குப் பொறுப்பு காங்கிரஸுக்கும், BJP-க்கும் உள்ளது. அதனால் எங்கள் எம்.பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள். NOTA வசதி இருந்தால் அதைப் பயன்படுத்தியிருப்போம்” என்று தெரிவித்துள்ளார். BJD மற்றும் BRS விலகியதால், NDA வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
NDA கூட்டணியில் தற்போது 427 எம்.பிக்கள் உள்ளனர். இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டிக்கு முழுமையான எதிர்க்கட்சி ஆதரவு இல்லாததால், முடிவு NDA-க்கு சாதகமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவு வெளியாக உள்ளது.