அட இது தெரியாம போச்சே... இந்தியாவில் இருக்கும் இந்த ரயில் நிலையத்திற்கு செல்ல விசா, பாஸ்போர்ட் வேண்டுமா ?

First Published | Aug 30, 2024, 12:07 PM IST

இந்தியாவில் ஒரு ரயில் நிலையத்திற்கு செல்ல பிளாட்பார்ம் டிக்கெட் மட்டுமல்ல, விசா-பாஸ்போர்ட்டும் தேவை. இந்தியர்கள் செல்ல வேண்டும் என்றாலும் பாஸ்போர்ட்-விசா தேவை. அதுதான், அட்டாரி ரயில் நிலையம்.

Attari-Wagah Border

இந்தியாவில் நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன.  நாட்டின் எந்த மூலையில் அமைந்துள்ள எந்த ரயில் நிலையத்திற்கும் எளிதாக ரயில்கள் மூலம் செல்ல முடியும். ஸ்டேஷனுக்குள் நுழைவதற்கு முன், அவர்கள் பயண ரயில் டிக்கெட் அல்லது பிளாட்பார்ம் டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் இந்தியாவில் உள்ள இந்த ஒரு ரயில் நிலையத்திற்குச் செல்ல பிளாட்பார்ம் டிக்கெட் மட்டுமல்ல, விசா-பாஸ்போர்ட்டும் தேவை. இந்தியர்கள் செல்ல வேண்டும் என்றாலும் பாஸ்போர்ட்-விசா தேவை. 

அதுதான், அட்டாரி ரயில் நிலையம். ஆம், அமிர்தசரஸில் உள்ள அட்டாரி ரயில் நிலையம். 'அட்டாரி ஷியாம் சிங்' ரயில் நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்திற்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா மற்றும் பாஸ்போர்ட் தேவை. ஏனெனில் இங்கிருந்து பாகிஸ்தானுக்கு ரயில்கள் செல்கின்றன, மேலும் பாகிஸ்தானுக்கான பயணம் அட்டாரி எல்லை வழியாகும். வடக்கு ரயில்வேயின் ஃபெரோஸ்பூர் கோட்டத்தின் கீழ் அட்டாரி நிலையம் அமைந்துள்ளது.
 

Tap to resize

Attari

இங்கு செல்ல பாகிஸ்தானிய விசா அவசியம். இந்த ரயில் நிலையம் பாதுகாப்பு இராணுவத்தின் பொறுப்பாகும். மேலும் பயணிகள் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே ரயில் நிலையத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் அமிர்தசரஸ்-லாகூர் வழித்தடத்தில் உள்ள கடைசி ரயில் நிலையம் அட்டாரி.

750 கி.மீ. தூர இலக்கைத் தாக்கும் 2வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படைக்கு அர்ப்பணிப்பு!
 

Latest Videos

click me!