'வந்தே பாரத்' பயணிகளுக்கு இனி கவலையில்லை; ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published : Feb 08, 2025, 10:12 AM ISTUpdated : Feb 08, 2025, 10:13 AM IST

இந்தியாவில் வந்தே பாரத் ரயிலுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் மகிழ்ச்சி அடையும்விதமாக இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.

PREV
14
'வந்தே பாரத்' பயணிகளுக்கு இனி கவலையில்லை;  ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
'வந்தே பாரத்' ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்; இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் நாட்டிலேயே அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. 

24
வந்தே பாரத் ரயில்கள்

நாட்டின் முக்கியமான நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.  இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே உணவுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும். வந்தே பாரத் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே உணவு வேண்டுமா? வேண்டாமா? என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு ரயிலில் பயணிக்கும்போது உணவு வழங்கப்பட்டு விடும். ஆனால் சிலர்  டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உணவு வேண்டாம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து விடுகின்றனர்.ஆனால் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும்போது அவர்கள் உணவுக்கான பணத்தை செலுத்த தயாராக இருந்தபோதிலும் ஐ.ஆர்.சி.டி.சி ஊழியர்கள் உணவு அளிக்க மறுத்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. 

இனி தட்கல் டிக்கெட் எடுப்பது ரொம்ப ஈஸி; ரயில்வேயின் இந்த புதிய‌'ஆப்' ஒன்று போதும்!

34
வந்தே பாரத் ரயில்களில் உணவு

அதாவது டிக்கெட் முன்பதிவின்போது 'உணவு வேண்டும்' என்பதை தேர்வு செய்தால் மட்டுமே உணவு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி ஊழியர்கள் கூறி வந்தனர்.  இந்நிலையில், டிக்கெட் முன்பதிவின்போது 'உணவு வேண்டாம்' என்று குறிப்பிட்டு இருந்தாலும், ரயில் பயணத்தின்போது பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு இந்திய ரயில்வே வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

44
இந்திய ரயில்வே

ஆகையால் இனிமேல் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் முன்பவின்போது 'உணவு வேண்டாம்' என குறிப்பிட்டு இருந்தாலும், ரயிலில் பயணம் செய்யும்போது ஊழியர்களிடம் பணம் கொடுத்து உணவு வாங்கிக் கொள்ளலாம். உணவு தர மறுக்கும் ஊழியர்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பால் வந்தே பாரத் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Train Ticket: ரயில் டிக்கெட் தொலைந்தாலும் டூப்ளிகேட் டிக்கெட் பெறலாம்; எப்படி தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories