பௌரி கார்வால் மாவட்டத்தின் பூராசி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். பிம்லா தேவி மற்றும் ஆஷா தேவி என அடையாளம் காணப்பட்ட இவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ஒரு வீடு மற்றும் ஒரு மாட்டு தொழுவமும் மண்ணில் புதைந்தன.
நேற்று உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் தாராலி கிராமத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதுவரை, இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை (ITBP), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மீட்புப் பணிகளில் இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.