Published : Nov 16, 2025, 08:32 AM ISTUpdated : Nov 16, 2025, 09:27 AM IST
படித்த, அனுபவமுள்ள வேட்பாளர்களை நிறுத்தி பீகார் தேர்தலில் பாஜக மற்றும் நிதிஷ் குமார் நிறுத்தி புரட்சி செய்துள்ளனர். ரங்கராஜ் பாண்டே வட மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத புதிய தகவல் ஆகும்.
தமிழகத்தின் பிரபலமான செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் பணி புரிந்து தற்போது தனது சொந்த YouTube சேனலை நடத்தி வருகிறார் ரங்கராஜ் பாண்டே. பிறந்து வளர்ந்தது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில். ஆனால் அவரது பூர்வீகம் பீகார் மாநிலத்தின் பக்சர் மாவட்டம் ஆகும். பக்சர் என்பது பீகாரின் ஒரு முக்கிய நகராட்சிப் பகுதி.
25
பீகார் தேர்தலில் பாஜக வெற்றி
இது பீகாரின் எல்லைப்பகுதியிலும், உத்தரப் பிரதேச எல்லைக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது. பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெறும் வாரணாசி (காசி) நகரில் இருந்து முகல் சராய் வழியாகச் சென்றால், வெறும் ஒரு மணி நேரத்தில் பக்சரை அடையலாம். அந்த அளவுக்கு உத்தரப் பிரதேசத்திற்கு நெருக்கமாக இருக்கும் பகுதிதான் பக்சர். ஹிந்தி மாநிலமான பீகாரின் இந்தப் பகுதியில் போஜ்புரி தான் பெரிதும் பேசப்படும் மொழியாகும். தற்போது நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தல் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
35
பக்சர் சட்டமன்றத் தொகுதி
அதில் முக்கியமாக, அலிகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல பாடகி மைத்திலி தாக்கூர், கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாஜக எம்எல்ஏ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்பெல்லாம் இந்தியாவில் அதிக குற்ற வழக்குகள் மற்றும் குற்றவாளிகள் போட்டியிடும் மாநிலம் என்ற பெயர் பீகாருக்கு இருந்தது. ஆனால் அந்த நிலைமை தற்போது மிக வேகமாக மாறி வருகிறது. இதன் அடிப்படையில், பக்சர் சட்டமன்றத் தொகுதியின் புதிய MLA ஆக ஆனந்த் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆனந்த் மிஸ்ரா, இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமான IIT யில் படித்து பட்டம் பெற்றவர். பின்னர் அவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக மாறினார். அவர் அசாம் காவல் துறையில் முன்னாள் ADGP ஆகவும், CRPF, CISF, ITBP போன்ற மத்திய பாதுகாப்பு படைகளில் மிக முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். இந்த தேர்தலில் பக்சர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் மிஸ்ரா, காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் குமார் திவாரி (முன்னா திவாரி)யை 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி வித்தியாசம் பெற்றார்.
55
பீகார் தேர்தல்
இவரைப் போலவே இம்முறை பீகாரில் பல படித்த பட்டதாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். பின்தங்கிய மாநிலம் என்ற பழைய பெயரை நீக்கி, பீகாரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் நோக்கில், படித்த, தகுதியான, அனுபவமுள்ள வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெறச் செய்ததாக பீகார் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.