Published : Jul 25, 2026, 02:44 PM ISTUpdated : Jul 25, 2026, 03:20 PM IST
Dharmendra Pradhan: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். மாணவர்களின் தொடர் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்துள்ளது.
நீண்ட நெடிய போராட்டத்துக்கு பிறகு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து நாடு முழுவதும் பரவியது.
25
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வைத்து கரப்பான் பூச்சி கனதா கட்சியினர் போராடி வந்தனர். மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
35
தர்மேந்திர பிரதான் மன வருத்தம்
இந்த நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்துள்ளது. பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். ''கடந்த 10 நாட்களாக நடந்த சம்பவத்தால் மிகவும் மனவருத்தம் அடைந்தேன். இளைஞர்களே நமது நாட்டின் பலன்'' என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
ஒருவழியாக தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்ததை மாணவர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போரட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், ''மாணவர்கள் சக்தி வாழ்க. மாணவர்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது'' கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இதேபோல் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் போராட்டம் நடந்தி வந்த மாணவர்களும் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை கொண்டாடினார்கள்.
55
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் முடிவுக்கு வருகிறதா?
இந்த நிலையில், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தாலும் தங்களது போராட்டம் தொடரும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளார். நாங்கள் கோரிக்கை விடுத்தபடி தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள அனைத்தும் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.