தொடர்ந்து ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன், ''அவர் எந்தத் திருத்தத்தைப் பற்றி பேசுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. பொருளாதாரம் மற்றும் அதன் அடிப்படைகள் வலுவாக உள்ளன.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை நமது பல துறைகளை பாதிக்கிறது. அவர்களுக்காக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஜவுளி, தோல், கிராமப்புறங்களில் பணிபுரியும் மக்கள், விவசாயிகள் மற்றும் மதிப்பு கூட்டல், பெண் தொழில்முனைவோர் மற்றும் சுயஉதவி தொழில்முனைவோருக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்" என்றார்.
''அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மைகளால் ஆதரிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வரும் எந்தவொரு ஏற்ற இறக்கத்தினாலும் சாதாரண, சிறு மக்கள் தங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்கான வழிகள் இவை'' என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.