நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். பொது போக்குவரத்துக்கு நாடு முழுவதும் 20 நீர்வழித் தடங்கள் அமைக்கப்படும். ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த 'மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்' என்ற புதிய திட்டம். 3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். பாரம்பரிய மருந்துகள் ஆராய்ச்சி மையம் குஜராத்தின் ஜாம்நகரில் அமைக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என அறிவித்துள்ளார்.